நேர்மையான அதிகாரிகளை பறையர்களைப் போல நடத்துகிறது இந்திய அரசு!





Image result for dinesh thakur ranbaxy




நேர்காணல்

தினேஷ் தாக்கூர்


அமெரிக்காவில் ரான்பாக்சி மீது குற்றச்சாட்டு எழுப்பி அதனை அபராதம் கட்ட வைத்திருக்கிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா?

அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் சாத்தியமாகலாம். இடுப்பெலும்பு மாற்று சாதனங்களை தரம் குறைந்து ரான்பாக்சி தயாரித்து விற்றது. இது காசு கொடுத்து வாங்கும் மக்களை ஏமாற்றுவதல்லவா? அதற்காகத்தான் நான் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டினேன். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சட்டங்கள் பற்றி பேசுவது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசுவது போல.


ரான்பாக்சியின் ஊழியர் என்ற லேபிளில் இருந்துகொண்டு எப்படி குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள்.

அரசின் சட்டப்பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. குற்றச்சாட்டை எழுப்பியவர் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக சில விஷயங்களை பேச முடிந்தது.


இந்தியாவில் புகார் கொடுப்பவர்களை காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா?

அசோக் கெம்கா என்ற ஐஏஎஸ் அதிகாரி (ஹரியானா), உத்தர்காண்டைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்ற அதிகாரிகளை இந்திய அரசு, பறையர்களைப் போல நடத்தியது. இதைப்பார்த்தால் எப்படி உங்களுக்கு நம்பிக்கை வரும்? இந்தியன் ஆயில் அதிகாரியான சண்முகம் மஞ்சுநாத், நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சத்யேந்திர துபே ஆகியோர் புகார்களைச் சொன்னதற்காகவே படுகொலை செய்யப்பட்டார்கள். அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தது? அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைக் காக்கும் விஷயத்தில் இந்தியா செல்ல வேண்டிய தொலைவு அதிகம்.

நன்றி - இடி மேகசின்

பிரபலமான இடுகைகள்