தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?
giphy.com |
மிஸ்டர் ரோனி
கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே?
ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர் இதற்காக ஏழாயிரம் கால்பந்து வீர ர்களை சோதித்துள்ளார். இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மூளை தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இறந்துபோயுள்ளது தெரிய வந்தது. பலரும் மூளையிலுள்ள நியூரான் தொடர்பான குறைபாடுகளுக்கு சிகிச்சை எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது.
நன்றி - பிபிசி