இடுகைகள்

சம்பவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். பு