இடுகைகள்

வறுமை ஒழிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமை ஒழிப்பு திட்டத்தில் அதிபர் ஷி ச்சின்பிங் சாதித்தது என்ன?

படம்
 ஷி ச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு ஷி ச்சின்பிங் கிராமப்புற வறுமை ஒழிப்பை தனது பேச்சுகளில், கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் நகர்ப்புற நிலைமைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவேண்டுமென கூறியவர் முன்னாள் அதிபர் டெங். பொருளாதார வளர்ச்சியின் வழியாக உலகளவிலான அந்தஸ்து, அங்கீகாரம் பெறுவதே நோக்கம்.  சீனாவில் தனிநபர் வருமானம் 2000ஆம் ஆண்டில் 500 தொடங்கி 4000 டாலர்கள் அளவில் பெருக வேண்டும் என்பது அவரது கனவு. இந்த வகையில் வறுமை நிலையில் இருந்து நாடு மேலெழுந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்பது அவரது கனவு.  ஆனால், டெங் எதிர்பார்த்ததை விட நாடு வேகமாக முன்னேறி வளர்ந்தது. ஆனால் இங்கே ஒரு பிரச்னை எழுந்தது. தாராளவாத பொருளாதாரம் , சர்வாதிகார நாடு என முரண்பாடுகள் உருவாகியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. டெங்கிற்கு அடுத்து அதிபரானவர்களான ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் சீனர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க முயன்றார்கள். அதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர்.  ஷி சீனா வளம் நிறைந்த நாடாக மாறுவது கடந்து வறுமை ஒழ...

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - வறுமை ஒழிப்பு எனும் தேசம் தழுவிய களப்பணி

படம்
  autoplay player               https://archive.org/details/2024-08-08-18-58-14

சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - இநூல் வெளியீடு

படம்
            வறுமை என்பது நாட்டை எளிதாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. வறுமையை புனிதமாக கொண்டாடும் அவலத்தில் கூட மனிதர்களை தள்ளுகிறது. வறுமையை ஒழிக்க, வெளிநாட்டினருக்கு தெரியாமல் சேரியில் ஏழைகள் வாழும் பகுதியை மறைத்து துணி கட்டுவது, தடுப்புச் சுவர் எழுப்புவது, மைய நகருக்கு அப்பால் கொண்டுபோய் மறைத்து குடிவைப்பது ஆகியவற்றை வலதுசாரி மதவாத சீரிய சிந்தனையாளர்கள் சிலர் செய்துவருகிறார்கள். இதெல்லாம் ஏழைகளை முற்றாக அழித்து கூடவே வறுமையையும் ஒழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களின் குரூரக்கனவு. இந்த இடத்தில் சீனா, வேளாண்மையை மட்டும் நம்பியுள்ள மக்களை எப்படி கல்வி அறிவு கொடுத்து, தொழில் பயிற்சிகளை அளித்து உற்பத்தி துறைக்கு நகர்த்தியது என்பதைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்தப் பணியில், நாடெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அன்றைய கட்சி உறுப்பினரான ஷி, நிங்டே கிராமத்திற்கு சென்று தங்கி வறுமை ஒழிப்பு பணிகளை மேற்கொண்டார். அதில் எதிர்கொண்ட பிரச்னைகள், மக்களின் கருத்துகள், அவர்களின் எதிர்காலம் மீதான ஆசை, வாழ்க்கை நிலை, வருமானம்...

விரைவில்... சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - ஷி ச்சின்பிங் இநூல் வெளியீடு

படம்
       

இந்தியா - சீனா ஒப்பீடு

படம்
              இந்தியா - சீனா ஒப்பீடு இரு நாடுகளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை. அனேகமாக மக்கள்தொகையில் மட்டுமே இந்தியா சற்று முன்னிலை பெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ள வல்லரசு நாடான சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இரு நாடுகளிலும் 1.4 பில்லியனுக்கும் அதிக மக்கள் உள்ளனர். இப்போதைக்கு இந்தியாவே பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது. ஐ.நா மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, சீனாவில் 116 ஆண்களுக்கு 100 பெண்கள் உள்ளனர். இந்தியாவில் 100 பெண்களுக்கு 110 ஆண்கள் உள்ளனர். உலக வங்கி அறிக்கைப்படி, 2022ஆம் ஆண்டில்  சீனாவில் உள்ள மக்களின் தோராய ஆயுள் எழுபத்தொன்பதாக உள்ளது. இந்தியாவில் மக்களின் ஆயுள் அறுபத்தெட்டாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் 18 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு. இந்தியா பொருளாதார வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொருளாதார அளவு 3.7 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உண்டு. இந்தியாவில் 820 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்...

முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்

படம்
சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம். எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம். நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக ...

மனதில் நம்பிக்கை இருந்தால் சாதாரண களிமண் கூட தங்கமாக மாறும் - ஷி ச்சின் பிங் உரை

படம்
சோசலிசத்தின் அடிப்படையாக வறுமையை ஒழித்து, மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது முக்கியம். இதன் வழியாக பொதுமக்களின் நலத்தை வளப்படுத்தலாம். வறுமையான சூழலில் உள்ள மக்களின் நிலையை கவனமாக கண்காணிக்க வேண்டும். மரியாதையும் அன்பும் கொண்டு அவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடிந்தளவு முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கும் மேல் உள்ள அவர்களின் தேவைகள், பிரச்னைகளை மனதில் குறித்துக்கொண்டு கட்சி, அரசு ஆகியவற்றின் வழியாக குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற முயலவேண்டும். சீனப் புரட்சிக்கு பழைய புரட்சித்தளங்கள், அங்குள்ள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அதை மக்களும், கட்சியும் என்றுமே மறந்துவிடக்கூடாது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்த செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக மக்களின் வாழ்க்கை பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. சீனா, சோசலிசத்தின் தொடக்க காலத்தில் நிற்பதால் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். கிராம பகுதிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள பகுதிகள் உள்ள நிலையில் வளமான சமூகத்தை கட்டமைப்பது என்பது ...