இடுகைகள்

முடிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்கள். அவர்

கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!

படம்
  கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள் கூறிய கருத்துகள்… உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில், என்னுடைய   முடிவை   நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில் நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான். -உடை வடிவமைப்பாளர் பீட்டர் டூ சில சமயங்களில் நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம். அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள். -பத்திரிகையாளர் ஜோ ஹோல்டர் உங்களின் உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம்.   பரவாயில்லை. நீங்கள் வேலை செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும் வழிகள் கிடைக்கும். -யூரி சோய், துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி உங்கள் உள்ளுணர்வை ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக இயங்கியிருக்கிறேன்.

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று க

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

ஸ்நாக்ஸ்கள்தான் எதிர்கால உணவா? மாண்டெல்ஸ் ஆய்வு முடிவுகள் வெளியீடு

ஸ்நாக்ஸ் சாப்பிடு சோற்றை கைவிடு இப்படி முடிவெடுத்தவர்கள் வேறு யாருமில்லை உலகளவில் இந்தியர்கள் இச்சாதனையைச் செய்திருக்கிறார்கள். உணவு நிறுவனமான மாண்டெல்ஸ் செய்த ஆய்வில் இந்தியர்கள் நொறுக்குத் தீனிக்கு முதன்மை இடம் கொடுத்து சோற்றையும், சப்பாத்தியையும் தள்ளி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேற்சொன்ன ஆய்வு பன்னிரண்டு நாடுகளிலுள்ள ஆறாயிரம் பேர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 75 சதவீத இந்தியர்கள் அதுதாங்க எங்க வாழ்க்கை எதிர்கால உணவு கூட என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். 53 சதவீத ஆட்கள் உலகளவில் இதே சத்தியத்தை சிலுவை வைத்து சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் நாள் முழுக்க சிறிது சிறிதாக ஏதேனும் கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக சாப்பாட்டுக்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள் என தங்கள் கம்பெனிக்கான பிடிமானத்தை மாண்டெல்ஸ் கண்டுபிடித்துவிட்டது. தற்போது உலகளவில் உப்பு பிஸ்கெட்டுகளுக்கான சந்தை 60 ஆயிரம் கோடியாக உள்ளது. விரையில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. நன்றி - இடி