முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

 









இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்கள். அவர் அப்போதுதான் பார்ட்டியில் மது அருந்திவிட்டு வந்திருக்கிறார்.அவர்தான்  வண்டியை ஓட்டுவேன் என அடம்பிடிக்கிறார். இங்கு உங்களுக்கு நிலைமை தெரிகிறது. மதுபோதை காரை விபத்துக்குள்ளாக்கும் என அடையாளம் காண்கிறீர்கள். காரை நீங்கள் ஓட்டலாம் அல்லது அந்த பயணத்தை தவிர்த்துவிடலாம் என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இதன் அடிப்படையில்தான் பிராஸ்பெக்ட் கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கை 1979ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

https://www.cartoonstock.com/search?type=images&keyword=decision-making&page=1

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்