டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

















டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார்.




ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை.




ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள் என அனைத்துமே வெளியே வந்துவிடும். உளவியலாளர்கள் இந்த அதிகாரத்தைப் பற்றி அறிய சோதனை ஒன்றை செய்தனர்.




ஒருவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்க சிலருக்கு அதிகாரம் கொடுத்து செய்யச்சொன்னார்கள். அதை ஏற்ற மனிதர்கள் மிக கொடூரமான மனிதர்களாக மாறி செயல்பட்டனர். ஏன்? அதுதான் மனித மனதின் அசல் குணம். ஒருவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என பொறுப்பைக் கொடுக்கும்போது, தன் பொறுப்பில் உள்ளவரின் பலவீனமான நிலையைக் கூட சாதகமாக பயன்படுத்தி அவரை கொடுமைப்படுத்துகின்றனர். சுரண்டுகின்றனர்.




ஆதிக்கவாதி/அடிமை என்றால் பொதுசமூகத்தில் ஆண்/பெண் என்றுதான் நினைக்கிறார்கள். இப்படித்தான் இந்த உறவுகள் அமையவேண்டுமென்ற அவசியம் இல்லை. பிடிஎஸ்எம் உறவுக்கு வெளியே இருப்பவர்களை வெனிலா என குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் பிடிஎஸ்எம் பற்றிய பல்வேறு வதந்திகளை இம்மக்களே உருவாக்குகிறார்கள்.




பல்வேறு விஷயங்களை தேடி அறிந்துகொள்ளும்போது, அறியாமை மெல்ல காணாமல் போய்விடும். முதலில் ஆதிக்கவாதி/அடிமை என்பவர்கள் தாங்கள் யார் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். பிறர் கூறுவதை கேட்டு நடக்க விருப்பமா? என ஒருவரிடம் கேட்டால் அதை அவர் உடனே மறுப்பார். இந்த கேள்வி ஒருவரின் சுயமரியாதையை, தன்மானத்தை கேள்வி கேட்கிறது. அதாவது ஒருவருக்கு அறிவு குறைவு எனவே பிறரின் அறிவை சொல்பேச்சைக் கேட்டு நடக்கிறார் என அர்த்தம். எனவே, ஒருவர் மட்டுமல்ல இக்கேள்வியை கேட்கும் பலரும் இதற்கு விருப்பமில்லை என்று கூறுவார்கள் உண்மையில் இதற்கான பதிலை நிர்பந்தமான சூழலில் அறியலாம்.




ஒரு வணிக மாலில் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். திடீரென அங்குள்ள ஒலிப்பெருக்கியில் கடையில் தீ பிடித்துவிட்டது. உடனே பதிமூன்றாம் எண் கதவருகில் செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இதை கேட்டு உடனே அங்கு செல்வீர்களா அப்படி சென்றால் நீங்கள் ஆதிக்கவாதி கிடையாது. ஒலிப்பெருக்கி குரலை கேட்டு உடனே சந்தேகப்பட்டால் நீங்கள் ஆதிக்கவாதி என கூறலாம். ஆதிக்கவாதி என்பவர் பிறரின் ஆணைகளை எடுத்துக்கொள்ள மாட்டாரா என்றால் எடுத்துக்கொள்வார். ஆனால் பெரும்பாலும் ஒருவரின் ஆணைகளை அவர் ரசிக்க மாட்டார். அவ்வளவுதான்.




சிலர் ஆதிக்கவாதி என்பவர் எப்போதும் ஆணைகளை எடுத்துக்கொள்ள மாட்டார் என நினைக்கிறார்கள் அது உண்மையல்ல. அப்படி எடுத்துக்கொண்டால் உண்மையான ஆதிக்கவாதி இல்லை என்று கூட தவறான நம்பிக்கை நிலவுகிறது.










pixabay

கருத்துகள்