நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!
1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.
துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று போவர் கூறினார்.
கார்டன் ஹெச் போவர்
இவர் அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். பள்ளியில் ஜாஸ் பாட்டு, விளையாட்டு என திரிந்தவர் போவர். இவரது ஆசிரியர் சிக்மண்ட் ஃப்ராய்ட் செய்த ஆய்வுகளை அறிமுகப்படுத்திய பிறகு படிப்பில் ஆர்வம் பிறந்தது. கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்தார். முனைவர் படிப்பை யேல் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு நகர்ந்தவர், அங்குதான் பேராசிரியர் பணியை செய்து வந்தார். அறிவாற்றல், கணிதம் சார்ந்து உளவியல் துறை பங்களிப்புக்காக தேசிய அறிவியல் பதக்கம் பெற்றவர் போவர்.
முக்கிய படைப்புகள்
1966 1975
theories of learning
1981 mood and memory
1991 psychology of learning and motivation
https://www.cartoonstock.com/search?type=images&keyword=emotion&page=1
கருத்துகள்
கருத்துரையிடுக