இடுகைகள்

ஸ்வஸ்திகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ