இடுகைகள்

அதிகாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு அதிகாரி வழங்கும் இலவச அரசுத் தேர்வு பயிற்சி - கேள்வி பதிலுக்கு பணப்பரிசு, மாணவர்களுக்கும் உணவும் உண்டு

படம்
  சௌதி அரேபியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர், நாராயண குமார். வேலையில் திடீரென சிக்கல் ஏற்பட்டு, மூன்று மாத சம்பளம் இல்லாத நிலையில் தனது ஊருக்கு திரும்பி வந்தார. அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியாத நிலையில், தவித்தார். அப்போது அவருக்கு மாரிமுத்து என்பவர் அரசு வேலைக்கான பயிற்சி வழங்குவது தெரிய வந்தது. விருதுநகர் சென்று பயிற்சி வகுப்பில்   கலந்துகொண்டவர், அரசு தேர்வு எழுதி தாசில்தாராக பணியில் இயங்கி வருகிறார். இவரின் உறவினர்கள் இருவர் கூட அரசு வேலையில்தான்   உள்ளனர். இவர்களும் மாரிமுத்துவிடம் பயின்றவர்கள்தான். இங்கு செய்தி மாரிமுத்துவைப் பற்றித்தான்.   பத்தாயிரம் இளைஞர்களை அரசுத் தேர்வில் வெல்ல வைத்திருக்கிறார். இவர் ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாசில்தாராக செயல்பட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளில் வெல்ல இலவச பயிற்சி வகுப்புகளை எடுக்கிறார். மாரிமுத்து, அரசுப் பணிகளுக்கான   பயிற்சி வகுப்புகளை பதினெட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து. அரசு அதிகாரியாவதுதான் அவரது கனவு. அதை நிஜமாக்கி 1994ஆம் ஆண்டு திருமங்கலத்தி

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்