இடுகைகள்

சுவாரசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

விண்வெளி வீரர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  விண்வெளியில் உள்ள குறைந்த ஈர்ப்பு விசையை, மைக்ரோகிராவிட்டி(Micro Gravity) என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  விண்வெளியில் ஆறுமாதம் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, உடலில் 20 சதவீத எலும்பு அடர்த்தி குறைகிறது.  விண்வெளியில் முதன்முறையாக உணவு உண்டவர் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான யூரி ககாரின் (Yuri Gagarin). வோஸ்டாக் 1 (Vostok 1)விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றவர், அங்கு மாட்டிறைச்சியும் ஈரலும் கலந்த பாஸ்தா உணவை உண்டார்.   உலர வைக்கப்பட்ட இறைச்சி, பால் பொருட்கள், பருப்புகள், ஈரப்பதம் குறைந்த பிஸ்கெட்டுகள், சாக்லெட், நூடுல்ஸ்,பாஸ்தா  ஆகிய உணவுப் பொருட்களை விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி அமைப்புகள் வழங்குகின்றன. வழங்கப்படும் உப்பும், மிளகும்  நீர்ம வடிவில் இருக்கும். தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்களுக்கென 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் கொண்ட பட்டியல் உள்ளது.  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள் (3 வேளை) வழியாக வீரர்களுக்கு 3,300 கலோரிகள் கிடைக்கின்றன. சாப்பிட்டபிறகு மீதமாகும் உணவுக்கழிவுகளை அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட க

இயற்பியல் பிட்ஸ்!

படம்
நீர் ஒரே நேரத்தில் சூடாகவும் மாறும் உறையவும் செய்யும். இதனை  டிரிபிள் பாயிண்ட் (Triple point)என்று கூறுகின்றனர். வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக நீர் திட, திரவ, வாயு நிலைகளுக்கு மாறும். மூக்கு கண்ணாடிகள் இல்லாதபோது, உங்கள் கையில் உள்ள விரல் இடைவெளியில் பார்க்கும்போது, எதிரிலுள்ள பொருட்களை ஓரளவு தெளிவாக காணமுடியுமாம். கி.மு.650 ஆம் ஆண்டு கிரேக்கர்களால் உருவான அறிவியல் துறை இயற்பியல். Physics  என்ற வார்த்தைக்கு இயற்கையிலிருந்து பெற்ற அறிவு என்று பொருள். நவீன ஜிபிஎஸ் முறை தொழில்நுட்பம் ஐன்ஸ்டீனின் E=MC 2 சூத்திரப்படி இயங்குகிறது.செயற்கைக் கோள்கள், ரேடியோ அலைகள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்கின்றன. தகவல்: MinutePhysics படம் - கிராபிக் ரிவர் - பின்டிரெஸ்ட் ஸ்