இடுகைகள்

குழு பாலியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிர்பயாவின் அம்மாவுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? - ஏ.பி.சிங் வழக்குரைஞர்

படம்
the asian age ஏ.பி.சிங், வழக்குரைஞர். நிர்பயா வழக்கில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பாக வாதிட்டு அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்தவர். இவரை ஊடகங்கள் பலரும் தூற்றினாலும் நான் அரசியலமைப்புச்சட்டம் சாதாரண குடிமகனுக்கு தரும் உரிமைகளைப் பெற்றுத்தர முயற்சிக்கிறேன் என்று கூறுகிறார். அவரிடம் பேசினோம்.  ஆங்கிலத்தில் – ஜீவன் பிரகாஷ் சர்மா தற்போது நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான பவன் குப்தா, தன்னுடைய கருணை மனுவை அனுப்பியுள்ளார். இனி இந்த மனுவுக்குப் பிறகு தூக்கு தண்டனையை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. அடுத்த என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்.  குற்றவாளிகளுக்கு சட்டரீதியான வாய்ப்புகள் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது? அவர்களது தூக்குதண்டனையைத் தள்ளிவைக்க பல்வேறு விஷயங்களை என்னால் கூற முடியும். ஆனால் அதனை சரியான நேரத்தில் கூறவேண்டும் என காத்திருக்கிறேன். உச்சநீதிமன்றம் எனது வாதிகளின் மனுவை தள்ளுபடி செய்தாலும் நான் அவர்களைக் காப்பாற்ற போராடுவேன். எவ்வளவு தூரம் சட்டம் அனுமதிக்குமோ அவ்வளவு தூரம் அவர்களைக் காப்பாற்ற முயல்வேன். கொடூரமான குற்றம் செய்தவர