இடுகைகள்

துருவக்கரடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

படம்
pixabay மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள் புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்? வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம். அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும். உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ?