இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாராவி இன்று! -மாறிவரும் தாராவியின் முகம் பற்றிய பார்வை

படம்
தாராவி 2.0 - ச . அன்பரசு முன்பு மும்பையில் அரசு மற்றும் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பகுதியாக ஏன் கதைகளில் சினிமாக்களில் கூட தீண்டப்படாத சேரியாக நடத்தப்பட்ட தாராவியில் இன்று நவீனத்திற்கேற்ப எக்கச்சக்க மாற்றங்கள் . 520 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள தாராவியில் கொழிக்கும் தொழில்களின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? தாராவியில் சந்து பொந்தெங்கும் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி என பன்மொழி பேசும் இடம்பெயர்ந்த மக்களின் கடின உழைப்பு தொழிற்பேட்டையான தாராவியை கரன்சி பேட்டையாக மாற்றியுள்ளது . தொழில்மயமாக்கலின் இருண்ட பகுதியாக ஏழைகளின் வாழிடமாக அரசுக்கு சங்கடம் கொடுக்கும் தாராவியை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன . ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த அகதிகள் , தோல்தொழில் , டெக்ஸ்டைல்துறை , குழந்தை தொழிலாளர்கள் , சுற்றுலா கைடுகள் , உணவுத்துறை என பல்வேறுவித தொழில்செய்யும் மக்களின் உழைப்பில் திடமாக உறுதியாக வணிகத்தில் முன்னேறி வருகிறது தாராவி . இங்கு வேலைசெய்து ஃபிளாட்டில் வீடு வாங்கினாலும் கூட தாராவியை விட்டு போகாத ப

செக்ஸ் வில்லன்கள்!

படம்
செக்ஸ் வில்லன்கள் ! - ச . அன்பரசு பாலியல் சீண்டல்களுக்கு நடிகை அமலாபால், பார்வதி, பாவனா என வெளிச்சத்தில் தெரிபவர்கள் மட்டுமல்ல, விழுப்புரத்தில் பிறப்புறுப்பில் பனிரெண்டு தையல்கள் போடப்பட்டுள்ள பதினைந்து வயது சிறுமியும் அடக்கம். ஜாதி வெறியாட்டங்கள் இன்று கிராமங்கள் கடந்து நகரங்களையும் வைரஸாக தாக்குகிறதா? இன்று ஹாலிவுட் நடிகைகள் வரிசையாக குறிப்பிட்ட தயாரிப்பாளர் மீது வைக்கும் புகார்கள் சின்ன உதாரணம்தான். உண்மையில் என்ன பிரச்னை? எப்படி எதிர்கொள்வது மீள்வது? வாசித்து அறிந்துகொள்ளுங்களேன்!  இந்தியாவின் சிறுநகரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான ரீனா சைனிக்கு , இந்தி சினிமாவின் கனவுக்கன்னி ஆவது ஆயுள் லட்சியம் . கத்ரீனா , பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்து நான்தான் என கொள்ளை ஆசையில் மும்பை சினிமா உலகிற்கு காலடி எடுத்து வைத்தார் ரீனா . ஆனால் காஸ்டிங் இயக்குநரான சோகன் தாக்கூர் மூலமாக கிடைத்ததென்னவோ பாலியல் டார்ச்சர்தான் . " என் மீது புகார் கொடுத்தால் உன் சினிமா லைஃப் காலி , உன் கேரக்டரையும் கேவலப்படுத்துவேன் " என தாகூர் மிரட்டியும் துணிச்சலாக கடந்த அக்டோபரில் போலீசில் அவர் ம

புத்தக அறிமுகம்!

படம்
புக் பாய்ன்ட் ! THE ALLIES STRIKE BACK, 1941-1943 The War in the West by James Holland Page count: 720pp Publisher: Atlantic Monthly இரண்டாம் உலகப்போர் பற்றிய ஆழமான அலசல்களையும் தகவல்களையும் அளிக்கும் நூல் இது . இங்கிலாந்து தன் கண்ணோட்டத்தில் இரண்டாம் உலகப்போரை எப்படி அணுகியது என்ற சித்திரத்தை அளிக்கிறது . பெரியளவு படைகள் இல்லாமல் சிறப்பான ஐடியாக்களை மட்டுமே வைத்து ஜெர்மனி உண்டாக்கிய பேரழிவுகள் , அச்சமயத்தில் இங்கிலாந்து , அமெரிக்கா நாடுகளின் அரசியல் சூழல் என அனைத்தையும் அழகான வரைபடங்களோடு விவரித்திருக்கிறார் ஆசிரியர் ஹாலண்ட் . THE FRACKING DEBATE The Risks, Benefits, and Uncertainties of the Shale Revolution by Daniel Raimi 256pp Columbia Univ எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்காக நிலம் துளையிடப்படுவது இயற்கை சூழலை எப்படி அழிக்கிறது என வெளிச்சமிட்டு காட்டும் நூல் இது . மிச்சிகன் பல்கலையைச் சேர்ந்த டேனியல் , ஹைட்ராலிக் முறையில் எண்ணெய்க்காக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் பூமியை துளையிட்டு உறிஞ்சுவதை பற்றிய கவனத்தை தன் முதல் நூலில் கையாண்டுள்ள

அறிவியல் ரகசியங்கள்!

படம்
டிஎன்ஏ மருந்து ! ஃப்ளூ காய்ச்சலை குணப்படுத்தாமல் நாம் மண்டையைப் பிய்த்துக்கொள்ள காரணம் , வைரஸ் தன் ஷேப்பை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதுதான் . வாஷிங்டன் மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டெபோரா ஃபுல்லர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வாக டிஎன்ஏ மருந்தை கண்டுபிடித்துள்ளனர் . " நாங்கள் உருவாக்கிய டிஎன்ஏ மருந்து வைரஸ்களின் உள்ளே ஜெனடிக் கோட்டை புகுத்தி , வைரஸின் புரதத்தை அதாவது ஆன்டிஜென்னை உருவாக்குகிறோம் . இதனை கண்டறியும் நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி , இதற்கு எதிராக போராடத் தொடங்கும் . இதனால் இன்புளுயன்சா வைரஸ் ஏற்படுத்தும் தொற்றுநோய் பாதிப்பை தடுக்கிறது . நோயைக் கட்டுப்படுத்த டிஎன்ஏ மருந்து மூன்றே மாதங்களில் பயன்தரத்தொடங்கி விடுகிறது . தற்போது டெபோரா டீம் , டிஎன்ஏ மருந்தை உடலில் செலுத்த ஜீன் துப்பாக்கியை கண்டுபிடிக்க ஆய்வு செய்துவருகிறது . குரங்குகளிடம் சோதித்து பார்க்கப்பட்ட இம்மருந்து , முழுமையாக தடுப்பூசியாக இன்னும் சில ஆண்டுகள் தேவை . 2 மூளையை படிக்க முடியுமா ? நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் பிளாக் மிரர் அறிவியல் தொடர்தான்

மன்னருக்கு போலி!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 3 மன்னருக்கு போலி! ரா . வேங்கடசாமி பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு  எவ்வித கொள்கையும் கோட்பாடும் இல்லை. தாங்கள் பிழைக்க வேண்டும் ; சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சிய தாகம் கொண்டவர்களான இவர்களுக்கு , மேல்தட்டு மனிதர்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அன்லிமிடெட் திருப்தி. அப்படிப்பட்ட அசகாய எத்தர்களில் ஒருவர் ஹாரிடோமிலா . மறைந்த மன்னர் கெய்சரின் பேரன் என்று சொல்லி உலா வந்தவர் . ஜெர்மனியில் கெய்சரின் பேரன் வில்ஹெம் வான் ஓகன் ஜோலரின் இருக்கும்போதே அப்படி சொல்லி ஏமாற்ற முயற்சித்தது ஹாரிடோமிலாவின் சமர்த்து .   ஹாரிடோமிலா , 1904-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார் . நடுத்தரக்குடும்பம் . இவரது தந்தை ஹாரி , சிறு குழந்தையாக இருக்கும்போது இறந்துவிட்டார். 1915- ஆம் ஆண்டு ஜெர்மனியில் லேட்வியாவை ஆக்கிரமித்தபோது ஹாரிக்கு 11 வயது. சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார் ஹாரிடோமிலா . 1918- ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்சியாளர்கள் , முன்னர் அந்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த புரூசியின் நிலங்களை மீண்டும் ஜெர்மனியோடு இணைக்கவேண்டும் என்று வெட்டியாக போராட்டம்

ஆசம் அறிவியல்!

பிட்ஸ் ! பழக்கப்படாத இடத்தில் நாம் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வெடுக்கும் , மற்றொரு பகுதி ஆபத்தை எதிர்கொள்ள அலர்ட்டாக இருக்கும் . ஜப்பானில் 2007 ஆம் ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பதவியேற்ற டாமா (1999-2015) என்ற பூனை , பயணிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தி வருமானத்தை 1.1 பில்லியன் யென்னாக மாற்றியது . ஓவியர் வான்கா தன் வாழ்நாளில் விற்றது ஒரே ஒரு ஓவியம்தான் . ரோம அரசரான டியோகிளெட்டியன் கி . பி . 305 இல் , பதவி விலகியவர் மீதி வாழ்வை தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களை வளர்ப்பதில் செலவிட்டார் . 1928 ஆம் ஆண்டில் படகு பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்கேற்றார் . போட்டியில் நீரில் பயணித்த வாத்துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்தவர் அந்த ரவுண்டில் எட்டு போட்டியாளர்களை முறியடித்து சாம்பியனானார் .     டொயொட்டாவின் தானியங்கி கார் ! டொயொட்டா லெக்சஸ் 600hL ஆட்டோமேடிக் காரை தனது ஆராய்ச்சி மையத்தில் தயாரித்துள்ளது . லைடார் ரேடார் , கேமரா என வசீகர டிசைனில் டெக் உலகை ஈர்த்துள்ளது . லைடார் எனும் சென்சார்களை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லூமினார் எனும் ஸ்டார்ட்அப் நிறுவ