வரலாற்று சுவாரசியங்கள் 1- ரா.வேங்கடசாமி

வரலாற்று சுவாரசியங்கள் 1

பணத்துக்காக மாறுவேடம்!

ரா.வேங்கடசாமி

தெற்கு இங்கிலாந்து பகுதியில், ஹாம்ஷைபரில் எஸ்டேட் அதிபர் டிச்போர்னே பிரபு. அவரது தலைமுறையில் பத்தாவது வாரிசு. அவருக்கு ஜேம்ஸ் என்றொரு சகோதரன். இவரின் மூத்த மகனின் பெயர், ரோஜர் டிச் போர்னே.
ரோஜர் பிறந்தது 1829-ஆம் ஆண்டு; யார்க்‌ஷையரில். கத்தோலிக்கர்கள் படிப்பதற்கான போர்டிங் ஸ்கூல் ஸ்டோனி ஹர்ஸ்ட்டில் ரோஜர் படித்தார். தனது இருபதாவது வயதில் சிக்த் டிராகூன் கார்ட்ஸ்கமிஷனில் தேறியவர் வெற்றிக்களிப்போடு வெளியே வந்தார். பத்தாவது பட்டம் வகித்த பிரபு வாரிசு இன்றி காலமாகிவிடவே அவரது ஒன்றுவிட்ட சகோதரன் எட்வர்டு டப்டி வாரிசானார். ஆனால் இவருக்கும் வாரிசு இல்லை. எனவே அவரது சகோதரி மகன் ரோஜர் பட்டத்திற்கு உரியவன் என்ற பேச்சு கிளம்பியது.
ஆனால் 1852-ஆம் ஆண்டு, ரோஜர் சர்எட்வர்டின் மகள் காதரினைக் காதலித்தார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு கத்தோலிக்க சர்ச் ஒப்புதல் தரவில்லை.என்ன பிரச்னை? ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதிதான் காரணம். காதலை அனுமதித்த சர் எட்வர்டு ஒரு புதிய நிபந்தனையை காதலர்களுக்கு விதித்தார். அவர்கள் ஒருவரையொருவர் மூன்று ஆண்டுகளுக்குப் பார்க்காமலும், சந்திக்காமலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கத்தோலிக்க சர்ச்சிடம் விதிவிலக்கு பெற்று, அவர்களின் திருமணத்தை எட்வர்ட் தானே நடத்துவதாக உறுதிமொழி தந்தார்.
அப்போது நிலவிய விக்டோரிய நாகரீகப்படி, ரோஜர் தனது கமிஷன் வேலையை உதறிவிட்டு, தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். பத்து மாதங்களுக்குப் பிறகு பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவிலிருந்து நியூயார்க்குக்கு பெல்லாஎன்னும் சிறிய பிரிட்டிஷ் கப்பலில் பயணித்தார். ஆனால் நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் புயலால் சிறிய கப்பல் பெல்லாகடலில் கவிழ்ந்து விட்டது. அதிலிருந்து உயிருடன் யாரும் மீளவே இல்லை. ஆனால் கப்பலின் லாப்புக்தீவிலிருந்த 400  கி.மீ மிதந்து வந்ததைக் கண்டு எடுத்தனர்.

1855 ஆம் ஆண்டு ரோஜர், சர் எட்வர்டும் மரணமடைந்து போனதால், ரோஜரின் தம்பி ஆல்பர்ட்டை இந்த அளவற்ற சொத்துக்கு வாரிசாக, கோர்ட் நியமித்தது. ஆனால் இந்த ஆல்பிரட்டும் அதிக நாட்கள் உயிரோடு இருக்கவில்லை. சில ஆண்டுகளே வாழ்ந்தவர், தன் சிறு வயது மகனை 12-ஆவது வாரிசாக நியமித்து விட்டு இறந்து போனார். மகன் பெயர் ஹென்றி. ஆனால் நம்பிக்கையை இழக்காத ஒருத்தி ரோஜரின் தாய் மட்டுமே!

தன் மகன் கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பதை அவள் நம்பவே இல்லை. அதனால் அவனைப்பற்றிய விபரங்கள் தெரிந்தால், தெரிவிக்கும்படி பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்தாள். 1865 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள வாகாவாகா என்னும் ஊரில் இருந்து ஒரு வக்கீல், ரோஜரின் தாய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.ரோஜர் தங்களுக்கருகில் தாமஸ் காஸ்ட்ரோ என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார் என்று எழுதியிருந்தார்.

 வாகாவாகா என்னும் அந்த சிறிய ஊரில் காஸ்ட்ரோ கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் படிப்பறிவற்ற ஒருத்தி மனைவியாக இருப்பதாகவும் கடிதத்தில் தகவல் இருந்தது. மகன் என்று சொல்லப்படுகிற தாமஸ், ஹென்றியட்டுக்குக் கடிதம் எழுதினான்.

1866 ஜனரி மாதம் எழுதப்பட்ட அக்கடிதம் என் அன்புள்ள அம்மாவுக்குஎன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஹென்றியட் பதிலும் எழுதினாள். அவனது தந்தையும், தம்பியும் இறந்துவிட்டதாகத் தகவல் கொடுத்தாள்.
முதலில் காஸ்ட்ரோவிற்கு, அவள் பணம் பூராவையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் தாய் எழுதியிருந்த செய்தி அவனது ஆசைக்கு உலை வைத்துவிட்டது. சிட்னியில் வசித்து வந்த பிரபு வீட்டின் பழைய வேலைக்காரனை தேடிப்பிடித்து தன்னை ரோஜர் டிச்போர்னே பிரபு என்று அடையாளம் காட்டச் சொன்னான். ஓய்வு பெற்ற வேலைக்காரன் பணத்துக்காக வேலையை  ஒப்புக்கொண்டார். நம்பிக்கை பெற்ற தாய், மகன் நாடு திரும்ப தேவையான பணத்தை அனுப்பினாள்.

காஸ்ட்ரோ தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார். ஆனால் தாய் ஹென்றியெட் பாரிஸ் நகரில் இருப்பதாக அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தார்.

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: விக்டர் காமெஸி