சிரிச்சுக்கிட்டே படிங்க!

Image result for yogi adityanath cartoon



மாற்றுத்திறனாளிகளுக்கு ஐடிபார்க்!

ஐதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐடிபார்க் ஷாம்ஸாபாத் ஏர்போர்ட் அருகில் பத்து ஏக்கரில் விரைவில் அமைக்கப்படவிருக்கிறது. அரசு-தனியார் கூட்டில் தெலுங்கானா அரசு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இத்திட்டத்தை அறிவித்தது.


"மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மற்றும் தங்கும் வசதிகளோடு, அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது அரசின் பிளான்" என விவரிக்கிறார் ஐடி துறை செயலர் ஜெயேஷ் ரஞ்சன். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சுயதொழில் கடன், கல்வி உதவித்தொகை, பாடநூல்கள்,லேப்டாப்கள்,ட்ரை சைக்கிள்கள் ஆகியவை அரசினால் வழங்கப்படவிருக்கின்றன. இதில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி,தொழிற்பயற்சி பெற சான்ஸ் உண்டு

2

மெர்சிடஸ் காருக்கு டூப்!

சீனர்களுக்கு அடுத்து அதைப்போல இது அட்டர் காப்பி அடிப்பதில் இந்தியர்களுக்கு நிகர் உலகில் யாருமே கிடையாது என்பது அண்மைய எக்சாம்பிள்தான் மெர்சிடஸ் டூப்.

கேரளாவின் மலப்புறத்தில் ஆர்டிஓ மெர்சிடஸ் காரை செக் செய்தபோது ஷாக் ஆனார். பிகாஸ் அது மெர்சிடஸ் கார் அல்ல அதே ஸ்டைலில் இருந்த மாருதி பலேனோ. லைட்,பம்பர்,லோகோ அத்தனையும் கச்சிதமாக டூப் செய்திருந்ததால் மெர்சிடஸ் டீலரே பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. செகண்ட்ஹேண்ட் சேல்சிற்காக மாருதி ஓனர் செய்த தில்லுமுல்லு தற்போது போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. ஏன்? காரை ஆல்டர் செய்ய ஆர்டிஓவின் பர்மிஷன் வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். லோக்கல் ஐன்ஸ்டீன்கள் மூலம் மாருதியை மெர்சிடஸ் ஆக்க தில்லுமுல்லு பார்ட்டி செய்த செலவு ரூ.3 லட்சம்.   
 3
கங்கைக்கு மில்லியனர்கள் உதவி! 

புனிதம்,புண்ணியம் என அடிக்கடி ஆரத்தி எடுத்தாலும் கங்கா கழிவுகளால் நிரம்பியுள்ளது என்பதுதான் நிஜம். தற்போது அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த இரு பணக்காரர்கள் பராமரிக்க இருக்கிறார்கள்.

வேதாந்தா, ஃபார்சைட் குரூப் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அனில் அகர்வால்,ரவி மல்கோத்ரா ஆகியோர் முறையே பாட்னா மற்றும் கான்பூர் பகுதி நதிப்பரப்பை தூய்மையாக பராமரிக்கும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஓகே சொல்லியுள்ளார். க்ளீன் கங்கா திட்டத்திற்கு அரசு 20 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கியுள்ளது. அனில் அகர்வால் பாட்னாவிலும், ரவி கான்பூரிலும் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலானவர்கள். நிதின்கட்கரி, லண்டனில் நடந்த 30 ஆவது சர்வதேச கடல்சார்அமைப்பு கூட்டத்தில் பங்கேற்றபோது க்ளீன் கங்கா பிளானில் பங்கேற்க இந்தியர்களை அழைத்ததால் கிடைத்த உதவி இது.  
 4
டூப் டாக்டரின் ஊசி!

போலீஸ் ஸ்டேஷன்,கலெக்டர் ஆபீஸ் என டூப்ளிகேட் ஆட்கள் உலவுவது வழக்கம். ஆனால் இப்போது ஹாஸ்பிடலிலும் நுழைந்து வேலையைக் காட்டத்தொடங்கிவிட்டார்கள்.
பெங்களூருவில் நடந்தது இந்த விநோத ரச மஞ்சரி மேட்டர்.
பெங்களூருவில் மல்லீஸ்வரத்திலுள்ள தனியார் ஹாஸ்பிடல். பத்மவாதம்மா, பாத்ரூமில் விழுந்து கால் ஃபிராக்சராகி ஆபரேஷன் செய்ய அட்மிட் ஆகியிருந்தார். ஸ்பெஷல் வார்டில் டாக்டர் கோட் போட்டு நுழைந்த திருடர், உறவினரை நைச்சியமாக வெளியே அனுப்பிவிட்டார்.  பத்மவாதம்மாவிடம் டாக்டர் போல நடித்து, கழுத்தில் தண்ணீர் ஊசியைப் போட்டு நைசாக கழுத்திலிருந்து செயினை அபேஸ் செய்து ஜெட் வேகத்தில் ஓடிவிட்டார். தற்போது போலீஸ் வாட்டர் ஊசி டாக்டரை லென்ஸ் வைத்து தேடிவருகிறது

5


சஸ்பென்ஸன் குத்துடான்ஸ்!

நமக்கு ஆத்மா குளிரும்படி சந்தோஷம் வந்தால் என்ன செய்வோம்? குபீர் என குத்து டான்ஸ் போடுவோமில்லையா? அதேதான் மேற்குவங்காளத்திலும் பிராக்டிக்கலாக சப் இன்ஸ்பெக்டர் செய்தார். ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?

மேற்கு வங்காளத்தின் ஆசான்சோலிலுள்ள ஹிராபூர் போலீஸ் ஸ்டேஷன்தான் சம்பவ இடம். அங்கு கண்துஞ்சாது கடமையாற்றி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண சதான் மண்டல் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏன்? அவரை அண்மையில் பர்ட்வான் மாவட்டத்திலுள்ள சித்தரஞ்சன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆனதை கொண்டாட அவர் எடுத்த முடிவுதான் காரணம். சூப்பர் இந்தி குத்துப் பாடலை ஒலிக்கவிட்டு தன் சக போலீஸ் ஆபீசர்களின் கரகோஷத்துடன் கிருஷ்ண சதான் ஆடிய கொலை குத்து டான்ஸ் வீடியோவை அவரின் மேலதிகாரிகள் ரசிக்கவில்லை என்பதுதான் சோகம். "கிருஷ்ண சதான் மீது துறைரீதியான என்கொயரி நடைபெறவிருக்கிறது" என்கிறார் உயரதிகாரி லஷ்மி நாராயணன் மீனா.

6
யோகியுடன் கல்யாணம்!

ஜெனரேஷன் இஸட் காலத்திலும் காந்தி முறையிலேயே போராட்டங்களும் நடத்தினால்  எப்படி? உத்தரப்பிரதேசத்தில் அங்கன்வாடி ஊழியர் நடத்திய போராட்டம் ஷாக் ஐடியா என்றாலும் புது தினுசு.

உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் நீது சிங்,  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மாலையிட்டு சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் கல்யாணமே செய்துவிட்டார். ஷாக் வேண்டாம். யோகியின் போட்டோவுக்குத்தான். அதிகாரிகளை உசுப்பேற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற இப்படி பிரஷர் கொடுத்துள்ளார் மகிளா ஆங்கன்பாடி கர்மாச்சாரி சங்கத்தின் தலைவரான நீது சிங். "இந்த திருமணத்தில் 4 லட்சம் சகோதரிகள் பயனடைவார்கள். இதிலென்ன தவறு?" என அனலாக பதில் பேசுகிறார் அதிரடி அம்மணி நீது. யோகிக்கு சங்கடம்தான்!

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்

Related image

பிரபலமான இடுகைகள்