இஸ்ரேல் -பாலஸ்தீன போராட்ட வரலாறு!
யூதர்களும் ஜெருசலேம் நகரமும்!
வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்கா தன்னிச்சையாக அங்கீகரித்ததை, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளே ஏற்கவில்லை.
13 முறை முற்றுகையிடப்பட்டு, 52 முறை தாக்கப்பட்டு, 44 முறை எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட வரலாறு கொண்டுள்ளது ஜெருசலேம் நகரம்.
கி.மு.3500
இக்காலகட்டத்தில்தான் ஜெருசலேம் நகரில் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. நகரத்திற்கான பாதுகாப்பு சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டு கி.மு.1800 ஆம் ஆண்டு சுபமாக முடிந்தது.
கி.மு.1000
மன்னர்
டேவிட், ஜெருசலேமை யூதர்களின் தலைநகரமாக அறிவித்தார். கி.பி.960
ஆம் ஆண்டில் இங்கு, டேவிட்டின் மகன் சாலமன் யூதர்களுகளின் முதல் கோவிலைக் கட்டினார்.
கி.மு.586-539
மன்னர்
சாலமனின் இறப்புக்கு பிறகு, யூதர்களின் அரசு ஆட்டம் கண்டது.
ஜெருசலேம் நகர் மீது படையெடுத்த பாபிலோன் ராணுவம் நகரையும்,
யூதர்களின் கோயிலையும் தரைமட்டமாக்கினர். பாபிலோன் மன்னர் சைரஸ், யூதர்கள் ஜெருசலேம் நகரில் தங்கவும்,
இரண்டாம் முறையாக கோயிலை கட்டவும் அனுமதி தந்தார்.
கி.மு.37-70
மன்னர்
ஹெராட் இரண்டாவது யூதர் கோயிலை பாதுகாப்பு சுவர்களோடு புனரமைத்தார். ஆனால் கி.மு. 30 இல் ரோமானியர்கள் ஜெருசலேமில் இயேசுவை சிலுவையில் அறைந்தனர்.
கி.பி
70 இல் ரோமானியர்கள் இரண்டாவது யூதர் கோயிலை தரைமட்டமாக்கி ஜெருசலேமை கைப்பற்றினர்.
கி.பி 335
பைஸன்டைன் கிறிஸ்துவர்களால் Sepulchre சர்ச் கட்டப்பட்டது. கி.பி
614 ஆம் ஆண்டில் பெர்சியர்கள் நகரை கைப்பற்றினர்.விடாமுயற்சியோடு போராடி பைஸன்டைன் கிறிஸ்தவர்கள் 629 ஆம் ஆண்டில் ஜெருசலேமை பெர்சியர்களிடமிருந்து மீட்டனர்.
கி.பி.638-1099
ஜெருசலேம் நகர் உமயாத்-அபாசித் ஆகிய முஸ்லீம் மன்னர்களால் நானூறு ஆண்டுகள் ஆளப்பட்டது.
யூதர்களின் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் டூம் ஆப் தி
ராக் சின்னம் உருவானது.
படையெடுப்புகள் தொடர்ந்தாலும் இஸ்லாமியர்களின் ஆட்சி நீடித்தது.1250
ஆம் ஆண்டில் மன்னர் காலிப்,நகரின் சுவர்கள் இடிக்கப்பட்டு மக்களுக்கான குவார்ட்டர்ஸ் உருவாயின.
1516-1948
ஜெருசலேம் நகரை ஒட்டமான் அரசர்கள் கைப்பற்றினர். 1538 ஆம் ஆண்டில் மன்னர் சுலைமான்,நகரின் பாதுகாப்புச்சுவரை திரும்ப கட்டினார்.
இங்கிலாந்து ஒட்டமான் ராணுவத்தை தோற்கடித்து ஜெருசலேமை வென்றது. ஐ.நா
சபை விதி 181 படி,ஜெருசலேமுக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்தது.
இஸ்ரேல் தனிநாடாக உதயமானது.அராபியர்களுடன் பிரச்னை வெடிக்க,
மேற்குப்பகுதி இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்டது.மீதி ஜோர்டானுக்கு என
முடிவானது.
1949-1967
இஸ்ரேல்
தனது தலைநகராக ஜெருசலேமை அறிவித்து, அரசு அமைப்புகளை,நாடாளுமன்றத்தை டெல் அவிவ் நகரிலிருந்து மாற்றியது.
1967 ஆம் ஆண்டில் அராபியர்களுடன் ஆறு நாள் போரில் ஈடுபட்டு வென்ற இஸ்ரேல் ஜெருசலேமை முழுமையாக தன் கன்ட்ரோலில் கொண்டு வந்தது.
1977-2000
ஜெருசலேமிலிருந்த இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு எகிப்து அதிபர் அன்வர் சதாத் விசிட் செய்தார்.
இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் முஸ்லீம் தலைவர் இவரே.
2000 ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான்பால் மேற்குச்சுவர் அருகே பிரார்த்தனை செய்தார்.இஸ்ரேல்-பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை தோல்வியானது.
2017
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேமுக்கு அமெரிக்க நிறுவனங்களின் ஆபீஸ்களை மாற்றச்சொல்லி உத்தரவிட்டார்.அப்புறமென்ன, ஜோராக போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
நன்றி: அவுட்லுக்
தமிழில்: விக்டர் காமெஸி