சயின்ஸ் பிட்ஸ்!


Image result for radio


பிட்ஸ்!

பழக்கப்படாத இடத்தில் நாம் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வெடுக்கும், மற்றொரு பகுதி ஆபத்தை எதிர்கொள்ள அலர்ட்டாக இருக்கும்.

ஜப்பானில் 2007 ஆம் ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பதவியேற்ற டாமா(1999-2015) என்ற பூனை, பயணிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தி வருமானத்தை 1.1 பில்லியன் யென்னாக மாற்றியது.

ஓவியர் வான்கா தன் வாழ்நாளில் விற்றது ஒரே ஒரு ஓவியம்தான்.

ரோம அரசரான டியோகிளெட்டியன் கி.பி. 305 இல், பதவி விலகியவர் மீதி வாழ்வை தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களை வளர்ப்பதில் செலவிட்டார்.

1928 ஆம் ஆண்டில் படகு பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்கேற்றார். போட்டியில் நீரில் பயணித்த வாத்துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்தவர் அந்த ரவுண்டில் எட்டு போட்டியாளர்களை முறியடித்து சாம்பியனானார்.
 




 பிட்ஸ்!

சீனாவிலுள்ள 85% மக்களின் பின்னொட்டு பெயர்கள் ஒரேமாதிரியாகவே உள்ளது.

Trader Joe என்பவரின் கடையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சாம்பிள் சோதித்து வாங்கும் வசதி உண்டு.

Johannese Gumpp என்ற ஓவியர் தன்னைத்தானே வரைந்த போர்ட்ரைட் ஓவியத்தின் ஸ்பெஷல், ஓவியம் வரைந்துகொண்டிருக்கும் கம்ப்பின் உருவம், அவருக்கு எதிரிலுள்ள மூன்று கண்ணாடிகளிலும் மிகச்சரியான கோணத்தில் தெரியும்படி துல்லியமாக வரையப்பட்டிருக்கும்.

பண்பலை ரேடியோவில் பாடும் பாடகர்களுக்கு சல்லிப்பைசாவைக் கூட கண்ணில் காட்டாத  நாடுகள் அமெரிக்கா,சீனா,இரான்,வடகொரியா.

ஒருமுறை ரத்ததானம் செய்யும்போது(one Pint) உடலில் 650 கலோரி செலவாகிறது. இதன்மூலம் மூன்றுபேர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: ஆலன் வான்கா, ரிச்சர்ட் பியர்சன்