ஹாஸ்ய பக்கங்கள்!





செல்ஃபீ வித் பசுமாடு!

ஹரியானாவில் அமைக்கப்பட்ட பசு ஹாஸ்டல்களுக்கு அடுத்து, கொல்கத்தாவில் அடுத்த பசுநேச பிளானாக, பசுவோடு ஒரு செல்ஃபீ திட்டத்தை என்ஜிஓ ஒன்று முன்னெடுத்துள்ளது.


கோசேவா பரிவார் அமைப்பு, யூத்களிடையே செல்ஃபீ போட்டி வரவேற்பு பிரமாதம் என பூரிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து கோமாதாக்களுக்கான அசகாய போட்டியை நடத்திவரும் இவ்வமைப்பு, பசு வெறும் இறைச்சிக்கானவை மட்டுமல்ல என்பதை கொள்கையாக கொண்டது. "பசு பாதுகாப்பை மதம் அல்லது அரசியலோடு இணைத்து பார்ப்பது தவறு. சமூக மற்றும் அறிவியல் துறைகளில் பசுக்களுக்கு பெரும் பங்குண்டு" என புரியாத புதிராக பேசுகிறார் கோசேவா பரிவார் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக்பிரதாப் சிங். கோசேவா ஆப்பை டவுன்லோடு செய்து செல்ஃபீ படத்தை அப்லோட் செய்து பசுக்களை காக்கும் வசதியுண்டு.
2
அமெரிக்காவில் கிம்!

வடகொரியா அதிபர் கிம்முக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நடந்து வரும் வார்த்தைப் போர்கள் உலகப்பிரசித்தம். இந்நிலையில் கிம் திடீரென நியூயார்க்கில் ட்ரம்ப் டவருக்கு வந்து கதவைத் தட்டி ட்ரம்பின் நலம் விசாரித்தால் எப்படியிருக்கும்?

நியூயார்க்கில் வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின்  டூப் நடிகர், அதிபரின் உடையில் ட்ரம்ப் டவருக்கு வந்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்க, வெலவெலத்துப்போனது பில்டிங் பாதுகாவலர்களுக்கு. அதற்குள் கிம் டூப்பைப் பார்த்து ஆச்சரியமான அமெரிக்கர்கள், "ஹாய் ராக்கெட்மேன் இங்கே என்ன பண்றே?" என செல்லம் கொஞ்சியபடி பலரும் செல்ஃபீ எடுத்துக்கொண்டனர். ஜாலியான காமெடி கலாய் நிகழ்ச்சிக்காகத்தான் இந்த கிம் வேஷம். இணையத்தில் 9 லட்சம் பேர்களுக்கு மேல் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

3
பலூனில் டூர்

வானில் பறக்கும் ஆசை யாருக்குத்தான் இல்லை. உடனே விமானத்தில் ஜன்னல் சீட் பிடித்து சீட்பெல்ட் போட்டு பறப்பதை யோசிப்போம். இங்கிலாந்து சிட்டிசன் டாம்,  இங்குதான் லேட்டரல் திங்கிங்கில் யோசித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டலிலுள்ள தி அட்வென்ச்சரிஸ்ட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த டாம் மோர்கன், ஹீலியம் பலூனில் விண்ணைத்தொட்டு பறந்திருக்கிறார். 8 ஆயிரம் அடி உயரத்தில் 25 கி.மீ தூரம் நூறு ஹீலியம் பலூனை ஒன்றாக கட்டி அதன் கீழ் சேரில் அமர்ந்து பயணித்து பார்ப்பவர்களுக்கு த்ரில் கூட்டியிருக்கிறார். பல ட்ரையல்களைப் முயற்சித்து தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் இச் சாதனையை செய்திருக்கிறார் டாம். டாமின் முயற்சி ஹிட்டானதால், 2018 ஆம் ஆண்டில் ஹீலியம் பலூன் ரேஸ் நடத்த பிளான் செய்து வருகிறது அட்வென்ச்சரிஸ்ட் நிறுவனம்.
�ளனர்.
 4
சிகரெட்டில் சர்ஃபிங் போர்ட் 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சர்ஃபிங் வீரரும், இன்டஸ்ட்ரியல் வடிவமைப்பாளருமான டெய்லர் லேன், சுற்றுச்சூழல் லட்சியவாதி. கலிஃபோர்னியா பீச்சை க்ளீனாக்க நினைத்தவர், அங்கு குவிந்திருந்த  சிகரெட் குப்பைகளை பார்த்தவுடன் மலைத்துவிட்டார். பின் யோசித்தவரின் மூளையில் பல்ப் எறிய உடனே வேலையில் இறங்கினார்.

என்ன பிரயோஜனம்? சூழலைக் கெடுத்த சிகரெட் குப்பைகளை டஜன் மூட்டைகளாக பொறுக்கிவைத்து சர்ஃபிங் போர்ட்டை 3 மாதங்களில் பரபரவென பாடுபட்டு உருவாக்கிவிட்டார். மீன் மார்க்கெட்டுகளில் கழிவாகும் தெர்மாகோல்களையும் பயன்படுத்தியுள்ளார். "நாம் என்ன பயன்படுத்துகிறோம் என்ற விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இந்த சர்ஃபிங்போர்டு" என்பவரின் இப்படைப்பு, சான்ஜூவான் கேபிஸ்ட்ரானோவிலுள்ள சூழல் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
/o:p>
5
கல்விக்கு விருது!

பீகாரைச் சேர்ந்த சோட்டிகுமாரி சிங் என்ற இளம்பெண்ணுக்கு, ஸ்விட்சர்லாந்தின் Women s World Summit Foundation, கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்பித்ததற்காக ஸ்பெஷல் விருதளித்து கௌரவித்துள்ளது.

ரதன்பூரிலுள்ள முசாகர் எனும் இனக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கசடற கல்வி புகட்டியதற்காக விருது வென்றுள்ள சோட்டிகுமாரிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை ரூ.65 ஆயிரம். நிலமற்ற கூலிகளான முசாகர் இனக்குழுவைச் சேர்ந்த 108 குழந்தைகளுக்கு மாலையில் ட்யூசன் எடுத்து, சுகாதாரம்,கல்வி ஆகியவற்றைக் கற்றுத்தந்திருக்கிறார் சோட்டிகுமாரி. "தினமும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று குழந்தைகளை வகுப்புக்கு அழைத்துவருவது பெரிய வேலை. முதலில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றாலும் பின்னாளில் அனைத்தும் மாறியது" என மாற்றம் ஏற்படுத்திய கதையை பேசுகிறார் சோட்டிகுமாரிசிங். சுப்ரீம்குமாரி!  
 6
 மனிதனை சமைப்போம்!

இட்லி, புட்டு என ஆவியில் சமைத்தால் அலையலையாய் படையெடுத்து தின்னலாம். ஆனால் அதே மனிதனை நீராவியில் வேக வைத்தால்? ஃபேன்டஸி கதையல்ல; மலேசியாவில் நடந்த ஆவி பறக்கும் நிஜம் இது.

அரிசி,இனிப்புசோளம், வெஜ் பன் ஆகியவற்றை உள்ளே வோக் எனும் தட்டில் வைத்து கூடவே மனிதரையும் அமரவைத்து மூடி செய்யும் தாவோ மத சடங்கு இது. சடங்கு தொடங்கிய முப்பது நிமிடங்களில் உள்ளே வைக்கப்பட்ட லிம், கடுமையாக நீராவி காயங்கள் மற்றும் வெப்பத்தால் ஹார்ட் அட்டாக்கில் பெருமாளின் திருப்பாதம் சேர்ந்துவிட்டார். பத்து ஆண்டுகளாக Nine Emperor Gods Festival நிகழ்வில் நான்ஸ்டாப்பாக கலந்துகொள்ளும் லிம், இதற்கு முன்பு 75 நிமிடங்கள் நீராவியில் தாக்குப்பிடித்து ரெக்கார்ட் செய்தவராம். ஹியூமன் இட்லி!
7
ஸ்கூபா மாஸ்க் திருடன்- ரோனி

திருட்டில் ஸ்பெஷலான வெரைட்டி காட்டும் சுவாரசிய திருடர்கள் உண்டு. ஆனால் இப்போது முகத்தை மறைக்கும் மாஸ்க்கிலும் ஆல் நியூ டெக்னிக்ஸை கையாண்டு போலீசை அலையவிடுகிறார்கள் போக்கிரி குரூப்ஸ். ப்ளோரிடா போலீசுக்கு இதே டெக்னிக்கில்தான் தண்ணி காட்டினார்  டேவிஸ்.

ப்ளோரிடாவின் லார்கோ கேஸ் ஸ்டேஷன் பல்பொருள் கடையில் திடீர் கொள்ளை. அலாரம் அடித்தவுடன்  காரில் ஏறிய போலீஸ் யூடர்ன் போட்டு நின்று கடையைச் சுற்றிவளைத்தனர். தடாலடியாக கதவை உடைத்து உள்ளே போனால், திருடன் முகத்தில் ஸ்கூபா மாஸ்க். கத்தி பிளஸ் ஸ்கூபா மாஸ்க் துணையோடு திருடவந்த காமெடி திருடரின் பெயர் ஜியோஃப்ரே சாட் டேவிஸ் துப்புத்துலக்கி கண்டுபிடித்துள்ளனர். கடுப்பேற்றினால் சும்மாவிடுவார்களா? 1,55,000 டாலர்கள் ஃபைன் விதித்திருக்கிறார்கள்.
��ப்பாக கலந்துகொள்ளும் லிம், இதற்கு முன்பு 75 நிமிடங்கள் நீராவியில் தாக்குப்பிடித்து ரெக்கார்ட் செய்தவராம். ஹியூமன் இட்லி!
8
ஃபேஸ்புக்கின் தந்திரம்!

ஃபேஸ்புக் உலகம் முழுக்க புகழ்பெற்றாலும் எப்படி என்பதில்தான் சர்ச்சை. Twitter, Tumblr, Path ஆகியவை ஃபேஸ்புக் புயலிலும் தன்னை தனித்துவமாக காப்பாற்றிக்கொண்டன என்றாலும் ஃபேஸ்புக், இவற்றின் ஸ்பெஷல் அம்சங்களை அப்படியே காப்பிகேட் செய்து ரேஸில் முந்திவிடுகிறது. Foursquare ஆப்பின் 'செக்இன்' வசதியை அண்மையில் ஃபேஸ்புக் சுட்டிருக்கிறது. "எங்களோடு இணையுங்கள் இல்லையெனில் உங்களது வசதிகளை காப்பி அடிப்போம் எனும் ஒருவகை மிரட்டலே" என்கிறார் ஃபோர்ஸ்கொயர் ஆப்பின் துணை நிறுவனர். நவீன் செல்லத்துரை.

2016 அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக்கின் பங்கு, சுதந்திர பதிவர்களின் கருத்துக்களை நீக்குவது, அரசுக்கு ஆதரவு என ஃபேஸ்புக் மீதான சர்ச்சைகள் வெகுநீளம். 2013 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் Onavo என்ற இஸ்‌ரேலிய ஸ்டார்ட்அப்பை வாங்கியது. இதன்மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டை கணித்து எந்த ஆப்பை பயனர் அதிகம் பயன்படுத்துகிறார் என்பதை கண்டறிய முடியும். இதன்மூலம் புதிய ஆப்களை சமர்த்தாக காப்பி செய்து மார்க்கெட்டை கபளீகரம் செய்கிறது ஃபேஸ்புக்.
அமேஸான்-டயபர்ஸ்.காம், கூகுள்மேப்ஸ்-வேஸ் ஆகியவையும் இதேவழியில் பயணிக்கின்றன.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்  

  

பிரபலமான இடுகைகள்