விநோதம் புதிது!
விநோதரச மஞ்சரி பிட்ஸ்!
வினோத பனிச்சறுக்கு!
அமெரிக்காவின்
சவுத் கரோலினாவைச் சேர்ந்த அன்னா ஷீலெய் என்ற லேடி, யாரும் செய்யாத பார்திபத்தனத்தை
செய்து இணையத்தில் தன் வீடியோவை ஹைப்பர் ஹிட்டாக்கியுள்ளார். ஸ்கேட்டிங் போர்டை காலில் மாட்டி,
கயிறால் செல்ல நாய் கோடக்கை பிடித்துக்கொண்டு, பனியில் சறுக்கி ஜர்னி செய்து இன்டர்நேஷனல் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
பனிஷ்மெண்ட் பந்தயம்!
அமெரிக்காவின்
வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஜஸ்டின் போலியாசிக், இரவு ஏழு மணிக்கு வேஃபில்
ஹவுஸ் ஹோட்டலின் சேரில் அமர்ந்தவர், 24 மணிநேரத்துக்கு எழவேயில்லை.
ஏன்? ஃபுட்பால் மேட்சில் பந்தயம் கட்டி தோற்றுப்போனதற்கான
பனிஷ்மென்ட்டாம். தன் சேரின் கீழேயே போர்டு வைத்து அமர்ந்திருந்த
போலியாசிக் இந்தவார இணைய வைரல் மனிதர்.
பேன்ட் இன்றி பயணம்!
நியூயார்க் உள்ளிட்ட
இடங்களில் புத்தாண்டிற்கான பேன்ட் இன்றி ட்ரெய்ன்களில் பயணிக்கும் விழா தொடங்கியுள்ளது. 2002 ஆம்
ஆண்டு இதனை தொடங்கிய Improv Everywhere குழுவினரால், இந்த வினோத வழக்கம் இன்று 60 சிட்டிகளில் கொண்டாடப்படுகிறது.
தற்போது நியூயார்க்கில் 17 டிகிரி குளிர் என்றாலும்
பேண்ட் இன்றி மக்கள் ட்ரெய்ன்களில் உலா வருகின்றனர்.
பனியில் திருடன்!
அமெரிக்காவின்
வடக்கு டகோடாவில்,
ஹாப்பி லாபி கடையிலிருந்து போலீசுக்கு போன். திருடனை
பிடிக்க பாய்ந்த போலீஸ், கடையின் பார்க்கிங்கிலேயே சிம்பிளாக
திருடனை அமுக்கியது. எப்படி? திருடிய சரக்குகள்
பனியில் மாட்டியதுதான் காரணம். பர்சை பதட்டத்தில் தவறவிட்டு சொதப்பல்
திருடர் ஜான்சன், சிறையில் கம்பி எண்ணிவருகிறார்.
நன்றி: குங்குமம்