நேர்காணல்:"வரலாற்றிலிருந்து எதையும் கற்க நாம் விரும்பவில்லை"
முத்தாரம் நேர்காணல்
"வரலாற்றிலிருந்து எதையும் கற்க
நாம் விரும்பவில்லை"
நேர்காணல்: மாதவ் கோட்போலே, முன்னாள் உள்துறை செயலாளர்.
தமிழில்: ச.அன்பரசு
பாபர் மசூதி இடிப்பின்போது மத்திய அரசின் உள்துறை
செயலராக பணியாற்றியவர் மாதவ் கோட்போலே. பாபர் மசூதி இடிப்பின்போது
நடந்த கலவரத்தினால் மனம் வருந்தி பதவியை ராஜினாமா செய்து வெளியேறியவர் மாதவ்.
பாபர் மசூதி இடிப்பிற்கும், அதன் பின்னர் நடந்த கலவரத்திற்குமான காரணங்களாக எதை குறிப்பிடுவீர்கள்?
குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேரழிவு ஏற்படுத்தி தாக்குதல்
சம்பவம் அது. மாநில அரசு நினைத்திருந்தால் மத்திய அரசின்
ராணுவத்தை கோரி கலவரத்தை அடக்கியிருக்கலாம். ஆனால் மாநில அரசு,
காவல்துறையின்மேல் அதீத நம்பிக்கைக்கு நாம் பெரிய விலையை தரவேண்டி இருந்தது.
இதில் கரசேவகர்களின் பங்கு அதிகம் என்றாலும் அதற்கான கான்க்ரீட் ஆதாரம்
கிடைக்கவில்லை. மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க ஜனாதிபதி
ஆட்சியை அமல்படுத்த முயன்றும் அத்திட்டம் நிறைவேறாமல் போனது துரதிர்ஷ்டம்.
அரசின் சக்தியையும் மீறி கலவரம் சென்றுவிட்டதாக
நினைக்கிறீர்களா?
நாட்டில் வன்முறை பெருகியபோது,
மத்திய அரசு பாராமிலிட்டரி படை, ராணுவம்,
உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த
முயற்சித்தது. ஆனால் மாநில அரசின் அமைப்புக்குள் மத்திய அரசின்
தலையீடு குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்டது. உளவுத்துறையில் எச்சரிக்கைகளைப்
பெற்ற ராணுவம் தாக்குதல் பரவினால் தடுக்க தயாராகவே இருந்தனர்.
மசூதி இடிப்பு கலவரத்தின் விளைவாக மும்பையில் தொடர்விளைவாக
குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதனால் சமூகத்தின்
இழைகளே அறுந்துவிட்டன என்று கூறலாமா?
மகாராஷ்டிராவில் குண்டுவெடிப்புகள் மிகமோசமான நிலையை
ஏற்படுத்தி விட்டன. பிஜேபி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான்,மத்தியப்பிரதேசம்,இமாச்சல்,உத்தரப்பிரதேசம்
ஆகிய இடங்களில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடப்பட்டதோடு கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்களும் இதில் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால் மகாராஷ்டிராவில் மாநில அரசு செயலிழந்துவிட, சிவசேனா
கட்சி அரசு போலவே செயல்படத்தொடங்கிவிட்டது.
மசூதி இடிக்கப்பட்டபின் அதன் மறக்கமுடியாத விளைவாக
இன்று எதனைக் கூறுவீர்கள். முன்பை விட நிலைமை ஏதேனும்
மேம்பட்டிருக்கிறதா?
கடந்த
25 ஆண்டுகளாக பின்னோக்கி பார்த்தால் நமது பிரச்னைகள் எதுவும் மாறவில்லை.
இன்றும் அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து தாக்கப்பட்டு
வருகின்றன.மாநில அரசு தன் மாநிலத்திலுள்ள மசூதியை பாதுகாத்திருக்க
வேண்டும். ஆனால் உயர்நீதிமன்றம், தேசிய
ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகியவை தம் கடமையிலிருந்து தவறிவிட்டன.
இதுவரை ஆக்கப்பூர்வமான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சொல்லுங்கள் பார்ப்போம். உயர்நீதிமன்றம் உள்ளிட்டவற்றின்
நடவடிக்கை புரியாத இந்தியனும் அரசு என்னதான் செய்கிறது? என கேள்வி
கேட்பதை நாம் தடுக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா
ரயில் எரிப்பில் மத்திய அரசு என்ன செய்தது? மீண்டும் அப்படி ஒரு
பேரழிவு நிகழும் அரசு இறந்த காலத்தில் செய்ததைப்போலவே கையாலாகாத அரசாகவே நிற்கும் ஏனெனில்
நாம் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.
நன்றி: Prachi Pinglay
Plumber,Outlook
தொகுப்பு: விதேஷ் சக்ரவர்த்தி, சியாமளா பந்து