புத்தக வாசிப்பு!



Image result for steve jobs




ஸ்டீவ்ஜாப்ஸ் வழி - புதிய தலைமுறைக்கான ஐ லீடர்ஷிப்
வில்லியம் எல். சைமன்
தமிழில் : வானமாமலை
ரூ.250

ஜெய்கோ

Image result for j elliot, apple







இன்று ஆப்பிள் நிறுவனம் தனது வருங்காலத்தைக் காப்பாற்றுவதற்கான சிஇஓ தேடுதலில் இருக்கிறது. அப்படிப்பட்ட தேடுதலை வெற்றிகரமான தனது செயல்பாடுகள் மூலமாக ஏற்படுத்தியவர் ஸ்டீவ்.

சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால் ஆப்பிள் என்ற கணினி நிறுவனத்தை கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸாக ஸ்டீவ் என்ற ஒற்றை மனிதர் எப்படி முன்னேற்றினார் என்பதை அவருடன் பணிபுரிந்த ஜெ.எலியட் விவரிக்கிற நூல் இது.

தொழில்நுட்பத்தில் அபார ஆளுமை இல்லாதபோதும், தன் மக்கள்தொடர்பு, ஊழியர்களை ஊக்குவிக்கும் குணம், கொடையாளி மனம் , சரியானவர்களை சரியான இடத்தில் அமர்த்துவது என தன் சக போட்டியாளர்களிடம் இல்லாத விஷயங்களை எப்படி சாதித்தார் ஸ்டீவ் என்பது இந்நூலை முக்கியமான அலுவலக மேலாண்மை கையேடாக மாற்றுகிறது..

ஸ்டீவின் குணங்களை அப்படியே காப்பியடிப்பது எந்த இடத்திலும் பயனளிக்காது. ஆனால் குறிப்பிட்ட முடிவை நோக்கிய ஆர்வம் நமக்கிருந்தால் ஸ்டீவின் வழிமுறைகளை ஃபாலோ செய்தே ஆகவேண்டும். வேலை வாங்குவது, சரியான ஆட்களை எங்கிருந்தாலும் பிடித்து தன் கம்பெனியில் சேர்ப்பது, அங்கிருந்த ஊழியர்கள் விலகாமல் பார்த்துக்கொள்வது என ஸ்டீவ் செய்த வேலைகள் வெறும் ஐமேக், ஐபாட், ஐபோன் உருவாக்கியது மட்டுமல்ல. தனக்கான மேக் படையையே அவர் உருவாக்கியிருந்தார் என்றே கூறலாம்.

ஸ்டீவின் வாழ்க்கையை ஜெ.எலியட்டின் வார்த்தைகள் வழியாக அறியும்போது நமக்கு தோன்றுவது ஒன்றுதான். புத்துயிர் பெற்று எழும் இடையறாத போராட்டம். ராபின்சர்மா நூலில் வருவது  போல ஆன்மிகரீதியாக ஸ்டீவ் இந்தியாவில் பெற்ற வெளிச்சம் அவரை அனைவரிலும் தனித்து காட்டியது.  முக்கியமான காரணம், அன்பை, உற்சாகத்தை உடனுக்குடன் பகிர்ந்துகொண்டதுதான். அவர் வேலை செய்யும் முறை யாருக்கும்  பிடித்தமானதாக இருக்காது அதாவது, வேலையை பணம் என்ற ஒன்றுகாக மட்டும் அதனை செய்பவர்களுக்கு. வேலையை நேசிப்பவர்கள், சவால்களை சுவாசிப்பவர்களுக்கு ஸ்டீவ் என்றும் தன்னிகரற்ற தலைவன்தான். சந்தேகமேயில்லை. மொழிபெயர்ப்பு  நூல் என்பதை மறைக்க முடியாது. சில முக்கியமான இடங்களில் வரும் தவறுகளை இன்னும் கவனமாக சரிசெய்வது நூலை செம்மையாக்கும். இந்த நூலை படித்தபின் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றையேனும் நம்பி வாழ ஆரம்பிப்பீர்கள். உள்ளுணர்வு, விதி, கர்மா குறைந்தபட்சம் வாழ்க்கை(ஸ்டான்ஃபோர்டு உரை, 2009)

-கோமாளிமேடை டீம்