சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017!



Image result for books


சிறந்த அறிவியல் புத்தகங்கள் 2017!

Swearing Is Good For You:
The Amazing Science of Bad Language
Emma Byrne
Rs.1,111, Profile Books

கெட்டவார்த்தை இல்லாமல் மொழி உண்டா? மொழியில் உள்ள கெட்டவார்த்தைகளின் வரலாற்றை சிம்பன்சி காலம் முதல் நம் காலம் வரை விளக்குகிறார் எம்மா பைர்ன்.

Mysteries Of The Quantum Universe
Thibault Damour & Mathieu Burniat
Rs.1,539, Particular Books

ஜாய்ன் பாப், தன் செல்ல நாய் ரிக்குடன் பால்வெளி பற்றிய மர்மங்களை அறிய செல்லும் பயணமே இந்நூல். ஐன்ஸ்டீன்,மேக்ஸ் பிளான்க் ஆகியோர் இப்பயணத்தில் பாப்புக்கு உதவி மர்மங்களை அறிய உதவுகிறார்கள். கிராபிக் நாவலாக இதனை படிப்பது சூப்பர் விறுவிறுப்பு.

Only Connect: The Official Quiz Book
Jack Waley-Cohen
Rs.1,282 BBC Books

சிக்கலான க்ளூக்களின் விடை தேடும் சுவாரசிய கேள்விகளைக் கொண்ட நூல் இது. பிபிசி டிவியின் பிரபல ஷோவாக நூலின் பெயரில் வெளியானாலும் பல கேள்விகள் புதிது. உங்களின் ஐக்யூவை சூப்பராக வார்ம் அப் கொடுக்க உதவும் பொது அறிவு நூல்.

Graphic Science
Darryl Cunningham
Rs.1,453 Myriad Editions

பலரும் அறியாத ஜார்ஜ் வாஷிங்டன், ஆல்பிரட் வெஜ்னர், நிகோலா டெஸ்லா உள்ளிட்ட ஏழு அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை கிராபிக் வடிவில் விளக்குகிறார் ஆசிரியர் கன்னிங்காம்.

Testosterone Rex
Cordelia Fine
Rs.1,282, Icon Books

செக்ஸ், மனித வளர்ச்சிக்கு ஒரே உந்துதல் என்ற கற்பனை வாதத்தை மறுக்கும் கார்டெலியா கடந்தகால வரலாற்றில் உள்ள ஆதாரங்களை சுட்டிக்காட்டி டெஸ்டோஸ்ட்ரோன் ஏற்படுத்தும் விளைவுகளை தெளிவாக விளக்குகிறார்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்