ஜாலி பேஜஸ்!


Image result for arnold schwarzenegger




இந்து குழந்தைகளை1 தத்தெடுத்த முஸ்லீம்கள்!

பிரிவினை வெறியூட்டி லாபம் சம்பாதிக்க அரசியல் கூட்டம் அலைந்தாலும் மனிதநேய மனிதர்கள் அதற்கு சரியான பதிலடிகளை அவ்வப்போது கொடுக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம்.


தெற்கு காஷ்மீரிலுள்ள லியூடோராவில் பேபி கவுல், தன் கணவர் இறந்தபின் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். கூலித்தொழிலாளியான பேபிகவுல் திடீரென இறந்துபோக, நான்கு குழந்தைகளும் அனாதையாகி தவித்து நின்றனர். அப்பகுதியிலிருந்த முஸ்லீம் குடும்பங்கள் பண்டிட் இனத்தவரான அக்குழந்தைகளை தத்தெடுத்து அரவணைத்ததுதான் இணையத்தில் வைரல் வரவு."நாங்கள் பணக்காரர்களல்ல. ஆனால் அக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை." என்கிறார் அக்குழந்தைகளின் கார்டியனான அகமது. குழந்தைகளுக்கு தனி வங்கிக்கணக்கு தொடங்கி அதில் ஐம்பதாயிரம் பணத்தை டெபாசிட் செய்து, வசிக்க வீட்டையும் தயார் செய்து கொடுத்திருக்கின்றனர் இஸ்லாமியர்கள். பேச்சை விட செயல் உன்னதமானது!

2

அர்னால்டு கைது!

வீட்டில் செல்ல பெட்ஸ்களை வளர்க்க யாருக்குக்குத்தான் ஆசை இல்லை. நாய்,பூனை,பன்றி,கிளி,ஆடு என இன்ஃபினிட்டியாக  நீளும் இந்த லிஸ்ட் முடியவே முடியாது. ஆனால் அதிலும் எக்ஸ்ட்ரீம் விலங்குகளை வளர்த்தால் எப்படியிருக்கும்?

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள சஃபோல்க் கவுண்டி பகுதியில் விலங்குகள் சங்கத்திற்கு திடீர் போன். செய்தியைக் கேட்டு அட்ரஸ் கண்டுபிடித்து காலிங்பெல் அடித்தால், அதிர்ச்சி. அந்த வீட்டில் 4 அடி முதலை ஜீவகாருண்டய டீமை ஆசையாக வெல்கம் செய்ய வந்தால் பீதியாகாதா? அமெரிக்காவில் முதலை வளர்க்க முறையாக பர்மிஷன் வாங்கியிருப்பது அவசியம். முதலை பெட் குடும்பத்திடம் உரிமம் இல்லாததால் குடும்பத்தினர் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டு,  அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகர் முதலை உடனடியாக கைது செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  


3

வருத்தப்படாத ஆண்கள் சங்கம்!

சட்டங்கள் பெண்களை புல் ஃபார்மில் சப்போர்ட் செய்ய, பாதிக்கப்பட்ட ஆண்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா? என சிந்தனை பொங்க ஆரங்காபாத்தில் வருத்தப்படாத ஆண்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சட்டவன்முறை, வேலையில்லாதவர்கள்,வீடற்ற கணவர்கள் என அனைவரும்  வாழும் கூடுதான் Patni Pidit Ashram (PPA). இந்த ஜென்ட்ஸ் ஒன்லி அமைப்பை பரத் ஆசாராம் புலாரே என்ற பிசினஸ்புள்ளி தொடங்கி வொய்ஃப்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அபயம் தந்துவருகிறார். பரத், சம்போக ஆசையில் மேரேஜ் செய்தார். ஆனால் மனைவியோ பணம்,வீடு அரித்து பிடுங்க டென்ஷனில் சில வார்த்தைகளை பரத் பேசிவிட்டார். மனைவி உடனே போலீசுக்கு போய் வரிசையாக 147 கம்ப்ளைண்டுகளை வரிசையாக எழுதிக்கொடுக்க அத்தனைக்கும் பதில்சொல்லி கோர்ட் படியிறங்கி ஐ பட விக்ரமாக உடம்பு டல்லானது பரத்துக்கு. அப்போது கணநேரத்தில் தோன்றிய சிந்தனைதான் இந்த ஆசிரம ஐடியா. ரொம்ப புதுசா இருக்குண்ணே!
4

டிராக்டரில் எம்.பி!

டிவிஎஸ் 50 யில் செல்பவர், எலக்‌ஷனில் ஜெயித்தவுடன், டூவீலரை கடாசிவிட்டு ஆடி காரில் ஊர்வலம் வருவது இந்திய மரபு. ஆனால் டிராக்டரில் பார்லிமெண்ட் சென்றால் எப்படி?

நேஷனல் லோக் தல்(INLD) கட்சியின் எம்.பி.  துஷ்யந்த் சவுதாலாதான் அந்த டிராக்டர் மந்திரி. பச்சை நிற டிராக்டரில் தன் அணுக்க தொண்டர்கள் இருவர் சகிதமாக டிராவல் செய்தவர், நேராக வந்திறங்கியது நாடாளுமன்ற வளாகத்தில். பலரும் ஷாக்கானாலும் செக்யூரிட்டியான இடத்தில் துஷ்யந்த் டிராக்டர் ஓட்டி காமெடி செய்ததற்கு விரைவில் கேஸ் பதிவாக இருக்கிறது. வண்டியை உள்ளே விட செக்யூரிட்டி அதிகாரிகள் பர்மிஷன் தராதபோதும், அட்வான்ஸ் அனுமதி பெற்றுவிட்டேன் என காரியம் சாதித்திருக்கிறார் துஷ்யந்த் சவுதாலா. கோக்குமாக்கு எம்.பி!

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்