சயின்ஸ் பிட்ஸ்!


Image result for elon musk



ஆஸ்திரேலியாவில் சிங்கம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன சிங்க இனத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்தில் விலங்கின் பற்கள்,மண்டையோடு,கால் எலும்பு ஆகியவற்றை கண்டுபிடித்து ஆராய்ந்த நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக(UNSW) ஆராய்ச்சியாளர்கள் இச்செய்தியை அறிவித்துள்ளனர்.

இறைச்சியுண்ணும் பாலூட்டியான சிங்கம், ஏறத்தாழ நாயின் சைசில் 23 கி.கி எடை கொண்டதாக இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம். Thylacoleo carnifex என்ற 130 கி.கி எடையுள்ள மெகாசிங்கத்தின் எடையில் மேற்சொன்ன சிங்கம் ஐந்தில் ஒரு பங்கு எடை கொண்டதுமெகா சிங்கமான தைலாகோலியோ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. எனவே மினியேச்சர் சிங்கத்திற்கு மைக்ரோலியோ அட்டன்பரோகி என பெயர் வைத்து டேவிட் அட்டன்பரோவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்."தொன்மையான சிங்கம் பற்றிய கண்டுபிடிப்புகள், அதன் குடும்பம் பற்றிய பல்வேறு உண்மைகளை அறிய உதவும்" என்கிறார் இதன் ஆராய்ச்சி தலைவரான அன்னா கில்லெஸ்பி.


 2

பிட்ஸ்!

பாலூட்டிகளின் அதிகபட்ச இதயத்துடிப்பு எண்ணிக்கை 1 பில்லியன். மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதனைக் கடந்து வாழ்வது மனிதர்கள்(2 பில்லியன் இதயத்துடிப்பு) மட்டுமே.

விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள், இருவரும் ஒன்றாக விமானத்தில் ஏறி டெஸ்ட் ட்ரைவ் செய்ய சம்மதிக்கவில்லை. ஏன்? அசம்பாவிதம் ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஆராய்ச்சி செய்யலாமே என்பதால்தான்.

ஐஸ்லாந்தில் கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தைய நாள், புத்தகங்களை பரிசுகளாக வழங்குகிறார்கள். இதனை இரவு முழுவதும் சாக்லெட் சாப்பிட்டு வாசிக்கிறார்கள். இந்த வழக்கத்திற்கு  Jolabokaflod என்று பெயர்.

உலகிலேயே மிகச்சிறிய மான் இனமான Pudu, மூங்கில் மரக்காடுகளில் வாழும் விலங்கு. அதிகபட்ச எடை 12.கி.கி

1800 ஆம் ஆண்டு விக்டோரியன் காலகட்டத்தில் உணவுமேஜையில் இறைச்சியைப் பற்றி மரியாதையாக குறிப்பிட உருவான வார்த்தைகளே White Meat, Black Meat. 

3

உலகின் ஸ்ட்ராங்க் காந்தம்!
நேஷனல் ஹைஃபீல்ட் லேபைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் அதி வலிமையான காந்தத்தை உருவாக்கியுள்ளனர். 32 டெஸ்லா வலிமை கொண்ட இக்காந்தம், முந்தைய காந்தத்தைவிட 3 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது.
"காந்தத்தின் தொழில்நுட்பத்தில் இது முக்கியமான முன்னேற்றம்" என உற்சாகமாகிறார் மேக்லேப் இயக்குநர் கிரேக் போபிங்கர். இந்த காந்தங்களால் எக்ஸ்ரே உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் இன்னும் மேம்பட வாய்ப்புள்ளது. இவ்வாண்டு மேக்லேப் உருவாக்கிய ரெசிஸ்டிவ் காந்தம், 41.4 டெஸ்லா சக்தி கொண்டது. இதன் மீது பாய்ச்சப்பட்ட 32 மெகாவாட் மின்சாரத்தின் ஆற்றலை விரைவில் இழந்துவிடும் தன்மை கொண்டிருந்தது மைனஸ் பக்கம். 1911 ஆம் ஆண்டு குறைந்த வெப்பநிலையில் செயல்படும்(-253 டிகிரி செல்சியஸ்) காந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. மின்கடத்தும் தன்மை அதிகம் கொண்ட காந்தங்கள் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் பெரிதும் உதவின. இதன் வெப்பநிலைக்கு ஹீலியம் தேவை. தற்போது அதிக வலிமையான காந்த சக்தி கொண்ட காந்தத்தை வேதியியல்,இயற்பியல்,உயிரியல் துறைகளில் பயன்படுத்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.  

4

தீராத வலி!

அமெரிக்காவில் 23 மில்லியன் பேர் தீராத வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14.5 மில்லியன் பேர் புற்றுநோய்க்கான வலிநிவாரண சிகிச்சையில் உள்ளனர். அறுவை சிகிச்சை, புற்றுநோய்,நாட்பட்டவலி,எய்ட்ஸ் தொடர்பான வலிநிவாரண சிகிச்சைகள் நடைபெறுகின்றன.  

மிகப்பிரபலமான வலிநிவாரணிகள் Tylenol,Asprin,Ibuprofen,Naproxen. பயன்படுத்தப்படும் விகிதம் 61%.

ஓபியத்திலிருந்து பெறப்படும் ஓபியாய்டுகள் கடுமையான வலியிலிருந்து விடுதலை தரும் முக்கிய வலிநிவாரணி.

உலக மக்கள்தொகையில் அமெரிக்கர்களின் அளவு 4.6% என்றாலும் பயன்படுத்தும் ஓபியாய்டு வலிநிவாரணியின் விகிதம் 80%.


5

ஹீமோபிலியாவை குணப்படுத்தும் ஜீன்தெரபி!
அமெரிக்காவில் கடந்த ஆகஸ்டில் ஜீன்தெரபி சிகிச்சைக்கு எஃப்டிஏ பச்சைக்கொடி காட்டியுள்ளது. கண்பார்வை -ஸ்கலிரோசிஸ் நோய் வரை ஜீன்தெரபி மூலம் தீர்வுகாண டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுத்தும் ஹீமோபீலியாவை பெருமளவு இச்சிகிச்சை குறைத்துள்ளது. "நாங்கள் எதிர்பார்த்ததை விட அற்புதமான தீர்வை ஜீன்தெரபியில் கண்டறிந்துள்ளோம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் பாசி. இதுதொடர்பான பதிமூன்று நோயாளிகளிடம் ஆராய்ச்சியாளர்களின் டீம் செய்த சோதனையில் ரத்தம் உறைவை தடுக்கும் புரத அளவை ஜீன்தெரபி பெருமளவு முன்னேற்றியுள்ளது. பத்தொன்பது மாத ஆய்வில் பதினொரு நோயாளிகளுக்கு ரத்த உறைதல் அளவு நார்மலாகியுள்ளது. "ஜிம் பயிற்சிகளில் கைகளின் எல்போவில் ஏற்பட்ட தசைகிழிவு காயம் ஜீன்தெரபி மூலம் நான்கே மாதங்களில் வலிகுறைந்ததோடு, உடலில் நல்ல முன்னேற்றமும் உள்ளது" என்கிறார் சிகிச்சை பெற்ற நலமடைந்த ஜேக் ஓமர். இதற்கான கட்டணம் ரூ. 1 லட்சம் டாலர்களுக்கும் மேல்.

 6

ரீசைக்கிள் விண்கலம்!
டெக் உலகில் அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் எலன் மஸ்கின் ஸ்பேஸ் X, நிறுவனம் ரீசைக்கிள் விண்கலத்தை சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசாவின் அனுசரணையோடு ஏவி சாதனை செய்துள்ளது. கேம் கான்வெரல் ஏவுதளத்திலிருந்து விண்கலம் விண்ணுக்கு பாய்ந்தது.கடந்த ஆண்டு இதே ஏவுதளத்திலிருந்து ஃபால்கன் ராக்கெட் ஏவப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
முதல் ராக்கெட் பரிதாப தோல்வியாகி வெடித்து சிதறினாலும், விக்கிரமாதித்தனாக ராக்கெட் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் எலன் மஸ்க். ஃபால்கன் ராக்கெட்டில் டிராகன் கேப்ஸ்யூலை இணைத்து பயன்படுத்தி சாதித்துள்ளார். 2 ஆயிரம் கி.கி. எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான பொருட்களை விண்கலம் ஏற்றிச்சென்று பின் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. அடுத்தமுறை செல்லும் விண்கலம் இன்னும் அதிக எடை கொண்டதாக இருக்கும் என அறிவியல் வட்டாரம் கிசுகிசுக்கிறது

தொகுப்பு: வில்லியம் ட்யூடர், ரிச்சர்ட் கென்
நன்றி: முத்தாரம்