புத்தக அறிமுகம்: கறுப்பு அடிமைகளின் கதை!
கறுப்பு அடிமைகளின் கதை
ஹேரியட் பீச்சர் ஸ்டவ்
தமிழில் வான்முகிலன்
அலைகள் வெளியீட்டகம்
முதலாளி ஷெல்பி வீட்டிலுள்ள எலிசா, மகன் ஜார்ஜ், ஹாரிஸ் ஆகியோர் திடீரென விற்கப்படும் நிலைமை உருவாகிறது. காரணம், வட்டிக்கு வாங்கிய கடன்தான் காரணம். ஓரே குடும்பமாக வாழ்ந்த ஹாரிஸ், எலிசா, மகன் ஜார்ஜ் பிரிய மனமில்லை. எனவே அ்ங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். ஹாரிஸ் வெள்ளையர் கலப்பில் பிறந்ததால் அங்கிருந்து கனடா தப்பிக்க நினைக்கிறார். எலிசா கடைசிவரை முதலாளியை நம்பினாலும் , மகனை பிரித்து விற்கப்போகிறார்கள் என்று அறிந்து டாம் மாமாவிடம் மட்டு்ம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு ஓடுகிறாள்.
அவளை பிடிக்க எதிர்கால முதலாளி முயன்றாலும் அதனை டாம் மாமா டீம் சமர்த்தாய் ஏமாற்றி சமாளிக்க எலிசா பாதுகாப்பான செனட்டரிடம் சென்று சேர்ந்து கணவனையும் சந்திக்க கதை சுபமாய் முடிகிறது. இன்னொரு பக்கம் டாம், இரண்டு முறை விற்கப்பட்டு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தில் இரண்டாம் முதலாளி இறக்க, லெஹ்ரி எனும் அசுரனிடம் சிக்கி சித்திரவதைப்பட்டு பிறரின் துன்பங்களை சிலுவையாய் சுமந்து இறந்து போகிறார். நாவலில் ஏசுவாய் பலரின் துன்பங்களுக்கும் கண்கலங்கி காவியத்தலைவனாக நெஞ்சில் உயர்பவர் அங்கிள் டாம்தான். ஆனால் அவரும் சுயநலமாக தன் மனைவி சோலேவை சந்திக்க போய்விட முடியும் என நம்புகிறார். ஆனால் அவருக்கு காலம் சகாயம் செய்யவில்லை. இறுதியில் லெஹ்ரியால் அடிபட்டு மிதிபட்டும் தனது முதலாளிக்கு மன்னிப்பை வழங்குகிறார்.
இது அனுபவக்கதை என்றாலும் இறுதிமுடிவு சுபமாக அமைவது பெரிய விஷயம். சுபமாக வாழ்க்கை தொடங்கும், சுதந்திரம் பெறுவோம் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லாத நிலையில் எலிசா அனைவருக்கும் தைரியத்தை அளிக்கிறாள். ஹாரிஸூம் அப்படியே. ஆனால் டாம் எந்த இடத்திலும் தனக்கான தலைவன் இடத்தை சிம்பிளாக பெரிய முயற்சி இல்லாமலேயே பெறுகிறார். சுதந்திரத்திற்கான அடையாளமாக டாம் மாறுவது இப்படித்தான் .
-கோமாளிமேடை டீம்