காதல் சொல்லும் ஹார்மோன்!







Image result for love hormone
உடல் தரும் பாக்டீரியா!

தோல் மாற்று சிகிச்சையில் புதிய திருப்பமாக 3டி இங்க்கில் பாக்டீரியா உயிரோடு பயன்படுத்தப்படவிருக்கிறது. உடலிலுள்ள நச்சுக்களை இங்கிலுள்ள பாக்டீரியா ஊக்கமூட்டும் வைட்டமின்களாக மாற்றுகிறது. பாக்டீரியா செல்லுலோஸ் சமதளப் பரப்பின் மீதுதான் வளரும் என நினைத்திருப்போம். ஆனால் 3டி வடிவில் உருவாக்கும் பொருட்களிலும் பாக்டீரியா பயன்படுகிறது. இது பல்வேறு மருத்துவ சிகிச்சைகள், காயங்களுக்கும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.


இங்க்கை 3டி வடிவில் பயன்படுத்த பாக்டீரியாவை உறைய வைக்கவேண்டும். பாக்டீரியா உயிருடன் இங்க்கில் வாழ செல்லுலோஸ் உருவாக்கத் தேவையான சர்க்கரை இதில் அவசியம் தேவை. "இங்க்கை ஒருமுறை பயன்படுத்தினால் அதில் உள்ள பாக்டீரியா ஆக்சிஜனின் மூலம் உணவைப்பெற்றுக்கொள்ளும்" என்கிறார் ஆராய்ச்சியாளரான பேட்ரிக் ரூக்ஸ்.
2
காதல் ஹார்மோன்!

உலகில் அனைவரும் அறிந்திருக்கும் ஹார்மோன், ஆக்ஸிடாசின். நட்பு,காதல்,காமம் பல டஜன் விஷயங்களுக்கும் இந்த ஹார்மோனின் அனுகிரகம் தேவை. தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த காதல் ஹார்மோனை செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள்.ஏன்?

 ஆக்சிடாசினை ஆட்டிசம், பதற்றம் ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்த நினைத்ததுதான் செயற்கை கண்டுபிடிப்புக்கு காரணம். இதன் மைனஸ் பக்கம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு. ஆனால் செயற்கை ஆக்சிடாசின், இயற்கையாக ஹார்மோன் ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இது எலிகளிடம் சோதனை செய்யப்பட்டதில் ரத்தத்தில் ஏற்படுத்தும் தூண்டல் குறைந்திருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட விளையாட்டு, அறிமுகமற்றவர்களிடம் பழகுவது ஆகிய விஷயங்களில் ஆக்சிடாசின் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றி விவரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை.


3

ஒளி மாசுபாடு!

உலகம் முழுக்க மின்சார சேமிப்பு வேகம் அதிகரித்துள்ளது. இதன்விளைவாக அனைத்து இடங்களிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சாலை,பார்க் என அனைத்து இடங்களிலும் பொருத்தப்படும் எல்இடி விளக்குகள் இயற்கையின் சமநிலையை குலைக்கத் தொடங்கியுள்ளன. 2012-2016 ஆம் ஆண்டுவரையில் ஒளி மாசுபாட்டின் அளவு 2.2% அதிகரித்துள்ளதை சயின்ஸ் அட்வான்ஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா,ஆசியா ஆகிய இடங்களை தவிர்த்து செய்த ஆய்வில் ஒளிமாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா,ஸ்பெயின்,நெதர்லாந்து,இத்தாலி ஆகிய நாடுகள் எல்இடி விளக்குகளின் பிரகாசம் குறையாத தேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன " என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளரான கிறிஸ் கைபா. இரவு-பகல் என மனிதர்களின் உடல் செயல்பாடு சூரியனைப் பொறுத்ததே. இது செயற்கை வெளிச்சத்தால் மாறும்போது மனச்சோர்வு, ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 



4
மிரட்டும் கருந்துளை!

பால்வெளியில் சூரியனைவிட படா பில்லியன் சைசில் கருந்துளை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாயு மற்றும் தூசிகளை வளையம் போல் கொண்ட கருந்துளை என்பது இதன் ஸ்பெஷல். 13.1 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கருந்துளை பல்வேறு சந்தேகங்களை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பெருவெடிப்பு நிகழ்ந்து 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது என்றால், கருந்துளையின் வயது 690 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்பது வானியலாளர்களின் முடிவு. பெருவெடிப்பிற்கு பின், எப்போது நட்சத்திரங்கள் தோன்றின என உறுதிசெய்ய முடியாவிட்டாலும் கருந்துளையின் வாயுக்களை ஆராய்ந்தால் பால்வெளியின் தோற்றம் குறித்து அறியலாம். புதிய கோள்களை தேடத்தேட உண்மையை பெறலாம். "நாம் பால்வெளி குறித்த பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டிருந்தாலும் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள கருந்துளை ஆராய்ச்சி உதவுகிறது" என்கிறார் மேக்ஸ் பிளான்க் வானியல் மையத்தின் கருந்துளை ஆராய்ச்சியாளரான பிராம் வெனிமான்.


5

இதயத்தில் பிரச்னை!

பேஸ்கட்பால் விளையாடும் வீரர்களில்(NPA) 15 சதவிகித பேருக்கு இதய சம்பந்தமான பிரச்னைகள் இருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பிலாழ்த்தியுள்ளது.

விளையாடும்போது விளையாட்டு வீரரின் இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றங்களை அறிய எலக்ட்ரோ கார்டியோகிராம்(or EKG) பயன்படுகிறது. இது விளையாட்டு வீரருக்கும், பிறருக்குமான இதயத்துடிப்பு வித்தியாசங்களை காட்டும். இதில் மாறுபாடு இருப்பவர்கள் பேஸ்கட் பால் ட்ரெய்னிங்கின்போதே விலக்கப்படுவார்கள் இது ஒன்றே வீக் இதயவீரர்களைக் காப்பாற்றும் வழி. அண்மையில் அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய சோதனையில் 519 வீரர்களில் 81 வீரர்களுக்கு இதயத்துடிப்பில் தடுமாற்றம் இருந்தது கண்டறியப்பட்டது. 2013-15 வரையிலான காலகட்டத்தில் பேஸ்கட்பால் விளையாட்டில் கறுப்பினத்தவர்கள் 80%, மீதம் வெள்ளை இனத்தவர்களும் இடம்பெறுகிறார்கள். இவர்களின் சராசரி வயது 25.

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட் லோக்கல் ப்ரூஸ்லீ

பிரபலமான இடுகைகள்