அசத்தும் அறிவியல்!


Image result for trump caricature
Niall O'Loughlin


வைர வலிமையில் கவசம்!

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள சிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  வைரத்தை விட வலிமையான கவசத்தை தயாரித்துள்ளனர்.

இரண்டு அடுக்குகளாக கிராபைன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கவச உடையில் கார்பன் அணுக்கள் தேன்கூடு போன்ற அமைப்பில் அமைந்து உடைக்கு அட்டகாச வலிமை தருகின்றன. கிராபைன்கள் இணைப்பினால் உருவாகும் டையாமீன் உதவியால் பாதுகாப்பு உடை மிக இலகுவானதாக சிக்கென உள்ளது. தற்போது மைக்ரோ தோட்டாக்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு வரும் கவச உடையை கணினி மாதிரிகளின் மூலம் சோதனை செய்துவருகிறது ஆராய்ச்சியாளர் ஆஞ்சலோ பாங்கியார்னோ தலைமையிலான குழு.


 ஏலியன் ஆராய்ச்சி தொடர்கிறதா?

2007 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா, சீக்ரெட்டாக வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியை செய்து வந்தது. 2012 ஆம் ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்கான நிதி கட் செய்யப்பட்டதால் ஆய்வுகள் நின்றுவிட்டன என்று அரசு கூறினாலும், குழு இன்றும் ஆக்டிவாக செயல்படுகின்றன என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2008-2011 வரை 22 மில்லியன் டாலர்கள் செலவில் AATIP எனும் திட்டத்தை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மேற்கொண்டது.

வானில் மர்மமாக சுற்றித்திரியும் விமானங்கள்,பறக்கும் தட்டுகள் பற்றி விரிவாக ஆராய்வதுதான் இந்த ஆய்வின் லட்சியம்.
"இந்த ஆராய்ச்சியே கறுப்பு பணத்தில் செய்யப்படுவதுதான். இதுபற்றி செனட் உறுப்பினர்களிடையே அரசு விவாதிக்காததன் காரணம் இதுதான்" என்கிறார் செனட்சபை உறுப்பினரான ஹார்ட் ரெய்ட்.ஏலியன்களின் வாகனங்களை பார்த்ததாக கூறியவர்களின் ரிப்போர்ட்களை பத்திரப்படுத்திய ராணுவம், அதனை பகிரங்கமாக வெளியிடாததை ஜான் க்ளென் என்ற வானியலாளர் சுட்டிக்காட்டுகிறார். அரசு மறைத்தாலும் ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சிகளை பலரும் மேற்கொண்டு வருவது தடைபடவில்லை.

பூமியின் அருகில் விண்கல்!

வானியலாளர்கள் வரும் ஆண்டில் பூமியைத் தாக்கும் மண்டையோட்டு டிசைனிலான கோள் ஒன்றை கண்டுபிடித்து அதிர்ந்துள்ளனர். 640 மீட்டர் சைஸ் கொண்ட TB145 என்று பெயரிடப்பட்ட இக்கோள் பூமிக்கு அருகில் 3 லட்சம் மைல் தொலைவில் 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் வந்தது. 6 சதவிகிதம் சூரிய ஒளி பெறும் தற்போதைய மண்டையோட்டு கோள், 2.94 மணிநேரத்துக்கு ஒருமுறை தன் சுற்றை நிறைவு செய்கிறது.

"நிலக்கரியைவிட சற்றே மின்னும் தன்மை கொண்டது இக்கோள்" என்கிறார் ஸ்பெயினின் அண்டாலூசியா வான் இயற்பியல் மையத்தின் வானியலாளரான பாப்லோ சான்டோஸ். சூரியனை சுற்றிவரும்போது இதிலுள்ள நீர் உள்ளிட்டவை ஆவியாகியிருக்கலாம் என கணிக்கும் ஆராய்ச்சியாளர்கள். பூமியை TB145 கோள் மீண்டும் நவ.2018 அன்று நெருங்கி வர வாய்ப்பு உள்ளது."ஆராய்ச்சிகள் மூலம் பெறும் தகவல்களில் போதாமை நிலவுகிறது. பூமிக்கு அருகே வரும் கோள்களை இன்னும் ஆழமாக ஆராய இந்த ஆராய்ச்சி உதவும்" என்கிறார் ஆராய்ச்சியாளர் சான்டோஸ்.

அமெரிக்காவின் வரி சீர்திருத்தம்!

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபர் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடுவது வழக்கம். கடந்துமுறை ஒபாமா, பத்திரிகையாளர்களுக்காக 86 நிமிடங்களை செலவழித்தார்.

ஒபாமா ரஜினி என்றால் ட்ரம்ப் கமலும், பார்த்திபனும் கலந்த கலவை. அண்மையில் பத்திரிகையாளர்களை அழைத்து 1.5 ட்ரில்லியன் வரிச்சீர்திருத்தத்தை கிறிஸ்துமஸ் பரிசாக அறிவித்துள்ளார் ட்ரம்ப். "கிறிஸ்துமஸ் காலத்தில், அதிபர் கையெழுத்து பற்றி "அதிபர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஜனவரியில் அறிவிக்க வேண்டிய சீர்திருத்தத்தை இன்றே இப்போதே அறிவிக்கிறேன்" என்று பேசினார் ட்ரம்ப். தன் மீதான நம்பிக்கையை காத்துக்கொண்ட அதிபர், தன் செயல்பாடுகளை மிகைப்படுத்துகிறார் என்ற பேச்சும் பத்திரிகை வட்டாரத்தில் உலா வருகிறது.

1980 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் செய்யப்படும் வரிச்சீர்திருத்தம் இது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி 35 லிருந்து 21 சதவிகிதமாக குறையவிருக்கிறது. தனிநபர்களின் வரி, 39 சதவிகித த்திலிருந்து 37% ஆக மாறியுள்ளது.

 குடும்பங்களுக்கும் உதவும் வரிகுறைப்பை ட்ரம்ப் நியாயப்படுத்தினாலும் ஜனநாயக கட்சியினர் இதை ஒத்துக்கொள்ள தயாராயில்லைநடுத்தரவர்க்கத்தை இந்த நிதி மசோதா பாதிப்பதோடு, எதிர்காலத்தில் கடன்சுமையும் 1.5 -20 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என இதனை எதிர்க்கின்றனர். "இந்த வரிச்சீர்திருத்தம் முன்னர் ரீகன் செய்ததை விட பெரியது. இது எனக்கு பெருமையான செயல்" என கலக்கலாக பேசுகிறார் ட்ரம்ப். இதற்கு பின்னணியில் செனட்சபை தலைவரான மிட்ச் மெக்கானல் உள்ளார். 5.5 ட்ரில்லியன் வரிவருவாய் இனி 3.2 ட்ரில்லியன் என 60% வரிச்சுமை குறையும் என இவாங்கா ட்ரம்ப் ட்விட்டரில் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.

தொகுப்பு: விக்டர் காமெஸி 
நன்றி: முத்தாரம்