மினி பிட்ஸ்!
பிட்ஸ்!
ஈமு குளியல்!
ஆஸ்திரேலியாவில்
மேற்கு பகுதியிலுள்ள மங்கி மியா பீச்சில் இங்கிலாந்து டூரிஸ்டுகள் ஜாலியாக நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது
யாரும் எதிர்பார்க்காத நண்பராக ஈமு பறவையும் அவர்களோடு வந்து இணைய, சுற்றுலாவாசிகள் பீதியானார்கள். ஆனால் ஈமு ஜாலியாக நீந்திய
வீடியோ, இணையத்தில் செமையாக ரவுண்ட் அடித்து வருகிறது.
டாட்டூ பெண்!
அமெரிக்காவின்
ப்ளோரிடாவைச் சேர்ந்த சார்லட் குடன்பர்க் என்ற பெண் தன் உடலின் 98.75% அளவு டாட்டூ குத்தி கின்னஸ் நூலில் சீட் போட்டிருக்கிறார். 50 வயதில் டாட்டூ குத்த தொடங்கியவருக்கு இன்று மிச்சமிருப்பது முகம் மட்டும் கைகள்
மட்டுமே. 2015 ஆம் ஆண்டும் கின்னஸ் சாதனை செய்தவர் இந்த அம்மணி.
மானிய நாய்!
அமெரிக்காவின்
மிச்சிகன் மாநிலத்தில் வேலையற்றோர் மானியத்தை மைக்கேல் ரைடர் என்ற நாய் பெற்றுள்ளது. காப்பீடு
அலுவலகத்தில் ரைடருக்கு வாரத்திற்கு 360 டாலர்கள் கிடைக்கவிருக்கிறது.
"எனது நாயிற்கு கிடைத்துள்ள பணத்தை என்ன செய்வது என ரைடர்தான் தீர்மானிக்கும்"
என புன்னகைகிறார் அதன் ஓனர் மைக்கேல் ஹடோக். அரசு
இதுகுறித்த என்கொயரியை தொடங்கியுள்ளது.
லக்கேஜூக்கு அபராதம்!
ஸ்பெயினின் பாடர்னா
நகரில் ட்ராஃபிக் நெரிசல்.
அப்போது அங்கு வந்த வெள்ளை நிற வேன் பலரையும் கழுத்தை திரும்ப பார்க்க
வைத்தது. வண்டியில் இருமடங்கு ஏற்றியிருந்த பாரம் அப்படி.
உடனே மேயர் ஜூவான் அன்டானியோ போலீசுக்கு புகார் கொடுக்க, ட்ரைவருக்கு ஸ்பாட்டிலேயே 1,243 டாலர்கள் ஃபைன் போட்டுவிட்டார்கள்.
2
பிட்ஸ்!
குட்மார்னிங் ஐரிஷ்!
அமெரிக்காவின்
அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மிச்செல் மையர்ஸூக்கு விநோத பிரச்னை. ஏழு ஆண்டுகளாக
படுக்கையிலிருந்து தலைவலியோடு எழுபவர், ஐரிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசிவருகிறார்.
2015 ஆம் ஆண்டு வலது கண்ணும், இடப்புற உடலும் செயலிழந்து
போய் பின்னர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் இயங்கத்தொடங்கியதிலிருந்து இப்பிரச்னை உள்ளதாம்.
ஆந்தை அட்டாக்!
கனடாவிலுள்ள பிரிட்டிஷ்
கொலம்பியாவில் ஜாக்கிங்,
சைக்கிளிங் செல்பவர்களை ஆந்தைகள் வானிலிருந்து தாக்க தொடங்கியுள்ளன.
சாவாசென் பகுதி போலீசுக்கு இரண்டு புகார்கள் வந்துவிட்டன. ஜாக்கிங் மற்றும் சைக்கிளில் செல்பவர்களுக்கு போலீஸ் டேக் டைவர்ஷன் போர்டு
வைத்து ஜிகுஜிகி கலர் ஹெல்மெட் வேண்டாம் என வார்னிங் கொடுத்துள்ளனர்.
'கமா'வால் பணம் போச்சு!
அமெரிக்காவின்
மெய்ன் மாநிலத்திலுள்ள பால்பண்ணைக்கும் ஓவர்டைம் பார்த்த தொழிலாளர்களுக்கும் 2014 ஆண்டிலிருந்து
வழக்கு பிணக்கு. சட்டவிதியில் ஓரிடத்தில் கமா மிஸ் ஆனதால்,
தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் டாலர்களை கம்பெனி
தரும் நிர்பந்தம் உருவாகிவிட்டது. நான்கு ஆண்டுகளாக கம்பெனி தரவேண்டிய
செட்டில்மென்ட் தொகை இது.
வறுவல் ரெக்கார்ட்!
இங்கிலாந்தின்
பிர்மிங்காமிலுள்ள பிரிட்டிஷ் ரிசார்ட்டில் 61.4 பவுண்டு எடையுள்ள மீனை வறுத்து
கின்னஸ் சாதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு,
2012 ஆம் ஆண்டில் லண்டனில் 42 பவுண்டு எடையில்
மீன் வறுக்கப்பட்டதுதான் சாதனை.
தொகுப்பு: ரோனி
நன்றி: குங்குமம்