அறிவியல் பிட்ஸ்!




கேட்ஜெட்ஸ் புதுசு!

Travelmate
ஏர்போர்ட்டில் தானாகவே உங்களை பின்தொடரும் இன்டலிஜென்ட் சூட்கேஸ் இது. வெயிட்டிங் ஸ்கேல்,ஜிபிஎஸ் ட்ராக்கிங், எல்இடி லைட், கைரேகை பாதுகாப்பு என அட்டகாச சூட்கேஸ் ட்ராவல்மேட் நிறுவனத்தின் தயாரிப்பு.விலை ரூ.32,382

Vespa Elettrica scooter
பார் புகழும் வெஸ்பாவின் எலக்ட்ரிக் 50சிசி எலக்ட்ரிக் ஸ்கூட்டர். நான்கு மணிநேரம் சார்ஜ் செய்தால் ஜம்மென 100 கி.மீ செல்ல முடியும். இதில் ஹைபிரிட் வெஸ்பாவும் உண்டு.2018 ஆம் ஆண்டு ரிலீஸ்.

LG K7i
பேட்டரி,ப்ரோசஸர் என்பதையெல்லாம் கடந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யோசித்த எல்ஜியின் கண்டுபிடிப்பு K7i போன். இந்தியாவிற்கென தயாரிக்கப்பட கொசு விரட்டி போன் இது. விலை ரூ. 9990

 2
சூழல் காக்கும் உயிரிகள்!

காகம்
அழுகிய பொருட்கள்,விலங்குகளை பெருமளவு சுத்தம் செய்வது பாக்டீரியாக்கள் மட்டுமல்ல; காகங்களும்தான். 2008 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜோஸ்வா கிலெய்ன் டெட் நிகழ்வில், குப்பைகளை பொறுக்க காக்கைகளை பயன்படுத்தலாம் என்று சொன்ன ஐடியா இன்று டெஸ்டில் உள்ளது.

கொசு
டெங்கு,யானைக்கால் நோய் உட்பட பல்வேறு தொற்றுநோய்களுக்கு டவுட்டே இல்லாமல் கொசுக்களே காரணம். அமெரிக்காவின் EPA, கொசுக்களை கட்டுப்படுத்த ஆண் கொசுக்களின் மேல் பாக்டீரியா நுண்ணுயிரியை ஏற்றி பெண் கொசுக்களை ஒழிப்பதுதான் பிளான்.

நாய்
நட்பைக் கடந்த மனிதர்களின் விசுவாசத்தோழன்.  தான்சானியாவின் செரங்கெட்டி காடுகளில் பல்வேறு உயிரிகளை காக்கும் பணிகளில் ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அபார நுகர்வுத்திறன் மூலம் எல்லை தாண்டும் விலங்குகளை முன்னதாக எச்சரிக்கும் திறன் பெற்றது.

 3
டெஸ்லா ட்ரக் பராக் பராக்!

எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை கலக்கியெடுத்த டெஸ்லா, கனரக ட்ரக் மார்க்கெட்டிலும் எலக்ட்ரிக் யுக்தியை கையிலெடுத்துள்ளது. தற்போது அறிமுகமாயுள்ள டெஸ்லா ட்ரக், 483 கி.மீ பாயும் சக்தி கொண்டது.

"எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, ட்ரக் சந்தையில் நுழைந்ததை வரவேற்கிறேன். பயணிகள் பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் முன்பே சாதித்தவர்கள் அவர்கள்" என்கிறார் அமெரிக்காவின் ட்ரக் சங்கத்தலைவரான கிறிஸ் பியர். கேஸ்,புரபேன் எரிபொருள் வாகனங்களுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் போஸ்ச் மற்றும் நிகோலா நிறுவனங்கள் இணைந்து 2021 க்குள் எட்டு எலக்ட்ரிக் ட்ரக்குகளை தயாரிக்கவிருக்கின்றன. டெய்ம்லரின் Fuso, கம்மின்ஸின் Aeos ஆகியவையும் இந்த ரேஸில் உள்ளன. மினி பஸ்,ட்ரக் ஆகியவை இந்த வரிசையில் ரிலீசாகவிருக்கின்றன. விற்பனை அதிகரிக்க, சார்ஜிங்  ஸ்டேஷன்களை அதிகரிக்கும் தேவையுள்ளது.



 4
செக்ஸ் ரோபாட் வந்தாச்சு!  
ரோபாட்டுகள் என்றால் உடனே டெர்மினேட்டர் அல்லது ஐரோபாட் பயங்கரங்களோ அல்லது சயின்ஸ் எழுத்துக்களின் ராஜேஷ்குமாரான ஐசக் அஸிமோவின் கதைகளோ நினைவுக்கு வரும். ஆனால் தினசரி வாழ்வில் ரோபாட்டுகள் பங்குபெறத் தொடங்கிவிட்டன. எப்படி? ரோபாட்டுகளை மேரேஜ் செய்யும் அளவு தீவிரமாகிவிட்டது நிலைமை. உலகம் முழுக்க தத்ரூபமாக பெண் ரோபாட்டுகளை தயாரிக்கும் 4 நிறுவனங்கள் உள்ளன. இனி இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்

கூடுதலாக, ஆதரவற்றவர்களை பராமரிக்கும் பணி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு என ரோபாட்டுகள் விரைவில் அதிரடி காட்டும்.

கலிஃபோர்னியாவின் ரியல்டால் நிறுவனம் 15 ஆயிரம் டாலர் செலவில் தயாரிக்கும் ஹார்மோனி எனும் ஹைப்பர் ரியல் செக்ஸ்பெண், உங்களோடு பேசுவாள், சிரிப்பாள், ஏன் பாலுறவும் சாத்தியம்தான். விளையாட்டல்ல, 30 பில்லியன் டாலர் புழங்கும் சந்தை இது. "இப்போது மனிதர்கள் தங்களுக்குள் இடையறாது பாலுறவை வைத்திருப்பதால், ரோபாட்டுகள் பிற பணிகளை செய்துகொண்டிருக்கின்றன. விரைவில் செக்ஸிலும் நுழையும். 25 ஆண்டுகளில் சாத்தியம்." என்று திடமாக பேசுகிறார் டாக்டர் ட்ரூடி பார்பர். சந்தையில் 7 ஆயிரம் யூரோக்களில் தற்போது Rocky or Roxxxy ஆகிய ரோபாட்டுகள் செக்ஸ் பயன்பாட்டிலுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மா என்பவர், ரோபாட்டுகளை பற்றி அறிவுஜீவியெல்லாம் கிடையாது. 35 ஆயிரம் பவுண்டுகளை செலவில் ஸ்கார்லெட் ஜோகன்ஸன் போன்ற பெண் ரோபாட்டை உருவாக்கியிருக்கிறார். ஸ்கார்லெட் என்றதும் அவென்ஞ்சர் பட பைட்டையெல்லாம் டூப்பில்லாமல் செய்யாது. நீ அழகாக இருக்கிறாய் என்றால், படு சிம்பிளாக வெட்கபுன்னகையோடு கண்சிமிட்டும்

உடனே பெண்கள் எப்போதும் செக்சுக்காகத்தானே என ஃபெமிநாஸி மூர்க்கம் காட்டுவது நல்லதல்ல.
"ரோபாட்டுகளை செக்சுக்காக ஆண்கள் பயன்படுத்துவது தவறு என்று ஊடகங்கள் தொடர்ந்து ஆண்கள் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் போர்ன் வீடியோவில் உள்ள பெண்ணைப் போலத்தான் ஆண்களிடம் பெண்கள் நடந்துகொள்கிறார்களா என்ன? பெண்களுக்கு தனி விருப்பங்கள், ஆசைகள் அனைத்தும் உண்டு. ஆனால் ஆண் இயல்பான பெண்ணிடம் உணராத பெண்மையை ரோபாட்டிடம் உணர்கிறான் என்றால் பிரச்னையின் ஆதாரம் எது?" என அழுத்தமாக பேசுகிறார் ரோபாட்டிக்ஸ் எதிக்ஸ் சென்டரைச் சேர்ந்த டாக்டர் கேத்லின் ரிச்சர்ட்சன். ஆண் ரோபாட் தொழிற்சாலை பணிகளுக்கும் பெண் ரோபாட் குடும்ப பணிகளுக்கும் சிறந்தவை என்று 2014 ஆம் ஆண்டு வெளியான நெஸ்டா ஆய்வு கூறுகிறது. பெண் செக்ஸ் ரோபாட்டுகளைப் போலவே ஆண்களிலும் செக்ஸ் ரோபாட் உண்டா என்ற கேள்வியும் எழாமலில்லை.

''இந்த விவாதம் இன்று மிக அவசியம். இதை கண்டுகொள்ளாவிட்டால் நாளை நீங்கள் தூங்கி எழும்போது உங்கள் அருகில் இருப்பது ரோபாட் துணையாகவே இருக்கும். அப்போது இது சரியா,தவறா என்று சிந்திக்க நமக்கு ஆப்ஷன்களே இருக்காது" என தீர்க்கதரிசனமாக பேசுகிறார் டாக்டர் வொயிட்பை. "தொழில்நுட்பம் என்பது நல்ல வேலைக்காரனாக இருக்கும்வரை நல்லதுதான். பூதமாக மாறாதபடி விழிப்புணர்வோடு பார்த்துக்கொள்வது நம் கடமை" என்று கடந்தாண்டு அட்வான்ஸ்மென்ட் சயின்ஸ் விழாவில் பேசிய யேல் விஞ்ஞானி வெண்டெல் வாலச்சின் வார்த்தைகள் சொல்வதே வருங்கால நிஜம்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம் 




 




பிரபலமான இடுகைகள்