புத்தக அறிமுகம் !

Image result for books



THE DANGER WITHIN US
America's Untested, Unregulated
Medical Device Industry and One Man's Battle to Survive It
by Jeanne Lenzer
336pp, Little, Brown Rs.1793

அமெரிக்காவின் முறைப்படுத்தப்படாத மருத்துவக்கருவிகள் பற்றி கருப்பு உண்மைகளை பத்திரிகையாளர் ஜீன்னேலென்சர் துல்லிய தரவுகளுடன் எழுதியுள்ள நூல் இது. அநியாய லாபம்,ஊழல் என இவரின் எழுத்தில் மருத்துவத்துறையில் இதுவரை நாம் காணாத உலகம் பயமுறுத்துகிறது. மருத்துவத்துறையில் தீர்க்கமான சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறார் ஆசிரியர் லென்சர்.

CHARLES DARWIN
Victorian Mythmaker
by A.N. Wilson
448pp, HarperCollins
Rs.448
பரிணாம வளர்ச்சியின் தந்தை, கடவுளைக் கொன்றவர் என அழைக்கப்படும் டார்வினின் சுயசரிதை. விக்டோரியன் காலத்து அறிவியலாளரின் வாழ்வை குளோசப்பில் காட்டும் நூல் இது. 1859 ஆம்ஆண்டு இவர் கண்டறிந்த பரிணாம வளர்ச்சி என்பது கற்பனையா என்ற சர்ச்சைக்கும் இதில் பதில் உள்ளது.

 2
புத்தக அறிமுகம்!

WHAT'S MAKING OUR CHILDREN SICK?
How Industrial Food Is Causing an Epidemic of Chronic Illness, and What Parents (and Doctors) Can Do About It
by Michelle PerroVincanne Adams
272pp Rs. 1608
Chelsea Green

1962 ஆம் ஆண்டு ரேச்சல் கார்சனின் நூல், DDT பிரச்னைகளை மக்களிடையே முன்வைத்து எச்சரித்தது. அதேபோல மிச்செல் எழுதியுள்ள நூல் மரபணுமாற்ற உணவுகள்,கிளைபாஸ்பேட் ஆகியவை குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது. இன்று முந்தைய DDT தடைசெய்யப்பட்டு விட்டாலும் அதைவிட வீரியமான நச்சுக்கள் நிலங்களை மாசுபடுத்தி வருகின்றன. நாம் இயற்கைக்கு ஏன் திரும்பவேண்டும் என்ற கேள்விக்கு பதில் அறிய அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது.

CAPITALISM WITHOUT CAPITAL
The Rise of the Intangible Economy
by Jonathan Haskel & Stian Westlake
288pp,Rs.1656
Princeton Univ.

பாரடைஸ் பேப்பர்களில் பெயர் வந்தாலும் வராவிட்டாலும் மறைவான சொத்துக்களின் எண்ணிக்கை உலகில் பெருகிவருகிறது. இதன்மூலமாக புதிய முதலாளித்துவ பொருளாதாரமும் வளர்ந்துவருகிறது. இந்நூலில், ஹஸ்கெல் மற்றும் வெஸ்ட்லேக் ஆகிய இருவரும் எதிர்கால பொருளாதாரமாக மறைவான முதலீடு எப்படி மாறும், அதற்கான வாய்ப்புகள்,நாடுகளின் சட்டங்கள் ஆகியவற்றை பற்றி நேர்த்தியாக விவரித்துள்ளனர்.
 3

புத்தகம் பேசுது!

PHYSICIAN
How Science Transformed the Art of Medicine
by Rajeev Kurapati
Manuscript
Kirkus Indie

நோயைக் கண்டறிவதில் நவீன மருத்துவம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதைக்கூறும் ஆய்வு நூல். நோயாளியின் நோயை தீர்ப்பதில் உணர்வு மற்றும் ஆன்மிகரீதியான பங்கை வரலாற்று பின்புலத்துடன் பேசுகிறது. க்ரீஸ்,சீனா,இந்தியா ஆகிய நாடுகளின் மருத்துவ முறைகளையும், நோய் தீர்ப்பதில் உளவியல் ரீதியான அணுகுமுறைகளையும் நெருக்கமாக ஆராய்ந்து மருத்துவர்களின் பங்களிப்பை நேர்மையாக புரியவைக்கும் நூல் இது.

WHAT’S HOLDING YOUR SALES BACK?
Find It, Face It & Fix It
by Peter Farkas with Leonard Atlas
284pp,CreateSpace
Kirkus Indie

பொருட்களை தயாரிப்பதைவிட அதை முறையாக மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளர் தலையில் கட்டும் சேல்ஸ் திறமை 21 ஆம் நூற்றாண்டின் அவசியத்திறன். விற்பனையில் அடிப்படைகளை விளக்கும் சூப்பர் கைடுதான் இந்நூல். நேரம்,கருத்து,எண்ணம்,செயல், முன்னுரிமை என குறிப்பிட்ட அடிப்படை கொள்கைகளை உதாரணங்களோடு விளக்குகிறார்கள் ஆசிரியர்களான பீட்டர் மற்றும் அட்லஸ்

தொகுப்பு: கோமாளிமேடை டீம்



பிரபலமான இடுகைகள்