இடுகைகள்

நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குடும்பத்தை அழித்த படைத்தளபதியை பழிவாங்க முயலும் பலவீனமான எல்லைப் பாதுகாப்பு படை வீரனின் போராட்டம்!

படம்
  எவர் நைட் சீன டிராமா முதல் பாகம் அறுபது எபிசோடுகள்  நிங்க் சூ, வெய் சிட்டி ராணுவத்தில் வேலை பார்க்கிறான். அவனை மரம் வெட்டுபவன் என கூறிக்கொள்கிறான். எல்லையில் உள்ள கொள்ளைக்காரர்களை அடித்து உதைத்து கொல்வதுதான் வேலை. அவனுக்கு வீட்டில் வேலை செய்ய சாங்சாங் என்ற சிறுமி இருக்கிறாள். அவளை குழந்தையாக இருக்கும்போதில் இருந்து நிங்க் சூ , தெருவில் இருந்து எடுத்து வளர்க்கிறான். இருவருக்குமான மனப்பொருத்தம் அந்தளவு நேர்த்தியாக உள்ளது. உடல் இரண்டு என்றாலும் மனசு ஒன்று.  இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நிங்க் சூ, ராணுவ வீரன். அவனுக்கு வீட்டில் சாப்பாடு தயாரிப்பது, உடைகளை துவைப்பது, வெந்நீர் போடுவது என அனைத்து வேலைகளையும் சாங்சாங் செய்கிறாள். அவளுக்கு நிங்க் சூ சொல்வதுதான் எல்லாம். வேறு எதுவும் முக்கியமல்ல.  தனது பெற்றோரைக்கொன்றவர்களை பழிவாங்க உடல்பலத்தோடு ஆன்மிக ஆற்றலும் தேவை என நிங்க் சூவுக்குத் தெரியும். எனவே, டேங்க் பேரரசின் தலைநகரத்தில் உள்ள டேங்க் அகாடமியில் சேர முயல்கிறான். இத்தனைக்கும் அவனுடைய உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்துமே அடைபட்டுவிட்டன. ஆனாலும் தற்காப்புக்கலைகளை தொடர்ந்து

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமை

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளி

தெரிஞ்சுக்கோ - நாடும் நாட்டு மக்களும்

படம்
  தனது நாட்டின் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை கலவரத்தை பற்றி, அதன்     ஆட்சித்தலைவர் புன்னகையுடன பேச முடிகிற காலத்தை எட்டியிருக்கிறோம். சமகாலத்தில் உற்பத்தி திறனில் அல்ல மக்கள்தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நிறைய மக்கள் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு வேலை தேடி, பொருளாதாரத்திற்காக நகர்கிறார்கள். பணக்காரர்கள், ஏழைகளுக்கான வேறுபாடு என்பது மேலும் அதிகரித்தபடியே இருக்கிறது.நாடு, நாட்டு மக்கள் பற்றிய   சில புள்ளிவிவரங்களைப் பற்றி பார்ப்போம்.   250 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் தோராய ஆயுள 29 ஆண்டுகள். 2019ஆம்ஆண்டு 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் 140 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் 55 மில்லியன் மக்கள் ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ளனர். உலகளவில் வறுமைக்கோடு என்பது, தினசரி 1.90 டாலர்களுக்கு குறைவாக சம்பாதிக்கும்   மக்களை கணக்கிட்டு உருவாக்கப்பட்டது.   2019ஆம் ஆண்டு ஐரோப்பாவில் 141 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு, இடம்பெயர்ந்த 52 சதவீத அகதிகளி

வெறுப்பு, பழிவாங்கும் வெறி ஆகியவற்றால் உருவாகும் மகத்தான நாயகன்! - அல்டிமேட் சோல்ஜர் - ரோக்

படம்
  அல்டிமேட் சோல்ஜர் மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் வயது வந்தோருக்கு மட்டுமே..... அரசின் ரகசிய அமைப்பில் வேலை செய்தவர் ஜெடோ. ஆனால், அவர் திடீரென தன் சக நண்பர்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினரான மனைவி ஸ்மைல் ரோஸ், ரோக் என்ற மகன் என இருவருமே துரோகிகள் என ஊராரால் தூற்றப்படுகிறார்கள். அடித்து உதைக்கப்படுகிறார்கள். ரோக் சிறுவனாக இருந்தபோதும், ஊர் மக்களால் சக வயதுடைய சிறுவர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். யாரும் சிறுவனை எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. அந்தளவு மக்களின் மனதில் வன்மம் பெருகி வளர்கிறது. ரோக் சிறுவனாக இருந்தாலும் அவனது அப்பா பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அவரின் செயலால் அம்மா கஷ்டப்படுவது பற்றித்தான் அதிகம் நினைக்கிறான். எனவே, அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவேனும் வலிமையாகவேண்டும் என நினைக்கிறான். இதனால் ஆன்ம ஆற்றல் உள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக மோதுகிறான். காயம்பட்டாலும் கூட எழுந்து நின்று அவர்களை பீதியூட்டுகிறான். இதற்கு காரணம், அவன் மனதில் மக்கள் மீது எழும் வெறுப்புதான். என்னை ஏன் தேவையில்லாமல் வெறுப்பேற

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெ

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்

போர்க்கலையைக் கற்ற பெண்ணை அலைகழிக்கும் ஆண்களை மையப்படுத்திய சீன சமூகம்! முலன் 2020

படம்
                முலன்    Director: Niki Caro Produced by: Chris Bender, Jake Weiner, Jason T. Reed Screenplay by: Rick Jaffa, Amanda Silver, Lauren Hynek, Elizabeth Martin ஆண்களுக்கு நிகரான தனது மூத்த பெண்ணுக்கு முன்னாள் போர் வீரர் பயிற்சி கொடுக்கிறார் . அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உயிர்சக்தி வலிமையாக உள்ளது . ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவள் பெண் என்பதற்காக அவமானப்படுத்துகிறார்கள் . இதனை எதிர்த்து அவள் எப்படி தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்துகிறாள் , தனது சுற்றியுள்ள உறவினர்களுக்கு தன்னை எப்படி புரிய வைக்கிறாள் என்பதுதான் படத்தின் மையக்கதை . படத்தை பார்ப்பவர்களுக்கு சீனத்தின் எப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை செக்சுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்பதே மனதில் ஓடும் . காரணம் , அந்த நாடு மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் பெண்களை அந்த காலத்தில் அப்படித்தான் ஒடுக்கினார்கள் . முலன் கோழியை எப்படி பஞ்சாரத்தில் அடைக்கிறாள் என்பதைக் காட்டும் காட்சியில் அவளது மன வலிமை , உடல் வலிமை , பெற்ற பயிற்சி என அனைத்தையும் காட்டி விடுகிறார்கள் .

நாட்டின் கௌரவத்தை காப்பாற்றும் நாயகன்! - கொரிய சினிமா

படம்
கான்ஃபிடன்ஷியல் அசைன்மென்ட் 2017 கொரியா இயக்கம் கிம் சுங் ஹூன் எழுதியவர் யூன் ஹூன் ஹோ ஒளிப்பதிவு லீ சங் ஜே இசை வாங் சங் ஜூன் கதை, சேசிங், பைட்டிங் என அனைத்தும் செய்வதற்கான கதை. யெஸ் இதுவும் ஒரு கௌதம் வாசுதேவ் மேனன் ரக பிழியும் சென்டிமெண்டுகள் கொண்ட படம்தான். வடகொரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர், சியோல் ரியுங்(ஹியூன் பின்) கம்யூனிஸ்ட் ஊழல் வாத தேசத்திலும் நேர்மையாக வேலை பார்க்கிறார். ஆனால் என்ன செய்வது, அவரின் மேலதிகாரி ஊழல் பெருச்சாளி. வடகொரியா அரசு, சத்தமின்றி செய்யும் டாலர் நோட்டுகளை கள்ள நோட்டுக்களாக்கும் வேலைக்கான பிளேட்டுகளை ஆட்டையப் போட்டு காசாக்கி செட்டிலாகப் பார்க்கிறார். அதற்கு குறுக்கே வரும் வரும் ரியுங்கின் மனைவி உட்பட போட்டுத்தள்ளுகிறார்.  ரியுங்கையும் படுகாயப்படுத்துகிறார். இதனால், ஆறாத கோபத்திற்குள்ளாகும் ரியுங்கை விஷயமே புரியாமல் வடகொரிய ராணுவம் கட்டிப்போட்டு குளுக்கோஸ் கொடுக்காமல் அடிக்கிறது. அவரால் காப்பாற்ற முடியாத டாலர் பிளேட்டை திரும்பக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க். இதற்கு தென் கொரியா போகிறார். விஷயத்தை மோப்பம் பிடித்த தெ