திவாலாகும் வங்கி!

 

 

 

 

பாயும் பொருளாதாரம் 15


திவாலாகும் வங்கி
உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள்.
அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுதான் எகிடுதகிடாக பேசுவார்கள். பெரும்பாலும் உயர்நிலையில் உள்ள பார்ப்பனர்கள், அவர்களின் காலைச்சுற்றி கிடக்கும் அடிமைகள் இப்படி லொள்ளுபேசுவார்கள். இந்தியா போன்ற மதவாத அடிப்படைவாதம் பெருகும் நாட்டில் இப்போக்கு அதிகம் காணப்படுகிறது.

வங்கிகளின் வேலை என்ன? மக்களின் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்து கடனை அளித்து வட்டியை பாதுகாப்பான அளவில் வசூலிப்பது. ஆனால் நிதிச்சூழல் சரியில்லை. மக்களின் நிதிநிலை தெரியாத, வங்கிகளை ஒழித்துக்கட்டும் டிவிடெண்ட் வாங்கித்தின்னும் வயிறு வளர்க்கும் நிதியமைச்சர் அவரைச் சுற்றி பொறுக்கித்தின்னும் ஓநாய்க்கூட்டம் இருந்தால் நாடு கீழே பாதாளம் நோக்கிச்செல்லும்.

2007ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வங்கிகள் அளவு கடந்த கடன்களை கொடுத்து திவாலாகத் தொடங்கின. எனவே, கடன் கொடுப்பதை உடனடியாக நிறுத்தின. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடனைப் பெறமுடியாமல் தவித்தன. மூடப்பட்டன. பணியாளர்கள் வேலை இழந்தனர். நிறைய நாடுகளில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டது. பொருளாதார வல்லுநர்கள் சந்தைக்கு ஏற்ப சில மாடல்களை உருவாக்கி பொருளாதார மந்தநிலை இப்படித்தான் இருக்கும் என ஜாதகம் கணித்துக்கொண்டிருந்தனர்.

அரசுகளோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ள குறைந்த சவால்களை ஏற்றுக்கொள்ள வங்கிகளை நிர்பந்தம் செய்துகொண்டிருந்தன. பொதுவாக அலுவலகத்தில் ஒருவர் அல்லது இருவர் நன்றாக வேலை செய்து அதை காப்பாற்றி வருவார்கள். மற்ற உதவாக்கரைகள் எல்லாம் அவர்கள் இருவரையும் சாடை பேசி தாக்கி வேலையை விட்டு வேளியேறச் செய்தால் எப்படி இருக்கும்? அதேதான் அரசும் செய்தது.

மரம் சூழலில் மாசுவான காற்றை உள்ளிழுத்து பிராணவாயுவை வெளியே விடுகிறது. மண், நீரை தூய்மையாக்கி தருகிறது. விதைகளை வளர வைக்கிறது. அதன் பயனாக பயிர்கள் விளைகிறது. நாம் உண்கிறோம். பயிர்களை தாக்கும் பூச்சிகளை தின்னக்கூட பறவைகள், ஊர்வன உண்டு. குறிப்பாக வௌவால், சாரைப்பாம்பு போன்றவை. ஆனால் மனிதர்களின் நுகர்வு அதிகரித்து கழிவுகள் கூடினால் என்ன செய்வது? எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துப்பான். பரவாயில்லை போய்ட்டு வாங்க என நாம் வேறு கோள் நோக்கி ராக்கெட் பிடித்து நகர வேண்டியதுதான்.

சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடு என்பதற்கான அடையாளம் என்ன என்று கேள்வி கேட்டால் பலரும் பல பதில்களை சொல்கிறார்கள். பதில்களைப் பார்ப்போம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட அங்கு வாழும் மக்களின் மனமகிழ்ச்சிதான் முக்கியமானது என அமெரிக்க பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் ஈஸ்டர்லின் சொல்கிறார். மக்களின் அடிப்படைத் தேவைகள் தீர்ந்திருக்கவேண்டும் என இன்னொரு மக்கள் பிரிவு கூறுகிறது. கைக்கூலி ஊடக தொகுப்பாளர் போல சிலர், நாட்டில் பணக்காரர்கள் அதிகரித்திருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி கூடியிருப்பது உத்தமம் என கூறுகிறார்.

அதெல்லாம் கிடையாதுங்க. மக்களுக்கு கருத்துகளை சொல்ல சுதந்திரம் தேவை. அவர்கள் அரசு மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். மக்கள் இனக்குழுக்கள், அமைப்புகளுக்கு ஆதரவு இருக்கவேண்டும். பணக்கார நாடு என்று வரிசையில் இடம்பெற்றால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட மாட்டார்கள் என அமெரிக்க பொருளாதார வல்லுநர் பெட்ஸி ஸ்டீவன்சன் கூறுகிறார்.

மலேரியா நாடு முழுக்க பரவுகிறது. அதைக்கொல்வது எப்படி என யோசித்தால் ஹிட் மருந்து அடித்து கொல்லும் வன்முறை முடிவை நிறையப் பேர் எடுப்பார்கள். ஆனால் மக்களை நோய் வராமல் காப்பது முக்கியம் என முடிவெடுத்தால் கொசு வலை கொடுப்பது நல்ல ஐடியா. அந்த வகையில், கென்யாவில் சில ஆய்வுகளை அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ ஆகிய இருவரும் செய்தனர். இவர்கள் இருவருமே பொருளாதார வல்லுநர்கள். அந்த வகையில் கொசுவலையை இலவசமாக கொடுக்கலாமா, சிறிது காசு வாங்கிக்கொண்டு மானிய விலையில் கொடுக்கலாமா என்பதற்கு, மக்கள் இலவசமாக கொடுக்கலாம் என உறுதியாக கூறினர். இலவசத்திற்கு அறுபத்தைந்து சதவீத தேர்வும். மானிய விலைக்கு பதினைந்து சதவீத தேர்வும் கிடைத்தது.

2017ஆம் ஆண்டு சீனா அதிகளவு பசுமை இல்ல வாயுவை வெளியிட்டுள்ளது. ஆனால் ஐஸ்லாந்தில் உள்ள தனிநபர் அளவில் பிரித்தால் அது குறைவான அளவுதான். எனவே பிரச்னைகளை இப்படி பகுத்தறிந்து பார்ப்பது முக்கியம். கைக்கூலி ஊடகங்கள் போல தலைப்புச்செய்தியை பார்த்து கொந்தளித்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்து சீனாவை எதிர்த்து போலி தேசப்பற்றை காட்டுவது முட்டாள்தனம். கொசுவோடு ஒப்பிடுகையில் முதலை மிகப்பெரிய மனிதகுல எதிரி கிடையாது.உலகம் முழுக்க கொசுவால் நான்கு லட்சம் பேர் தொற்றுநோய் வந்து இறக்கிறார்கள். இந்தியாவில் பசுமாட்டு இறைச்சியால் கிறிஸ்தவர், முஸ்லீம் என இரு சிறுபான்மை இனமும் உயிரை சொத்தை இழந்துவருகிறது. ஆக அவர்களுக்கு ஆபத்தானது கொசு கூட அல்ல பால்மாடு என முடிவுக்கு வரலாம்.

வேலையின்மை, ரூபாய் மதிப்பு சரிவு என்றால் இப்போது இந்திய அரசு புதுரூட்டை எடுக்கிறது. இப்படியே போனால் தாய் சங்கம் சார்ந்த வண்டவாளம், கையாலாகாத்தனம் வெளியே தெரிந்துவிடுமென அளவீடுகளைக் கூட மதவாதிகளிடம், தீவிரவாதிகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு கிடைத்து மக்கள் சௌக்கியமாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என போலிச்செய்தியை பரப்பி வருகிறார்கள். மதவாத கட்சி, இளைஞர்களுக்கு போண்டா, பஜ்ஜி, சமோசா சுட்டு சுயதொழில் முனைவோராகலாம் என பேசி வருகிறது. கூடுதலாக சிறுபான்மையினர் வீடுகளை இடிப்பது, வழிபாட்டுத்தலங்களை தோண்டி இந்து மத தெய்வங்களை கண்டுபிடிப்பது, கலவரம் செய்து வல்லுறவு கொள்ளை, கொலை செய்வது என பலருக்கும் திடீர் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து வருகிறது.

நன்றி
எகனாமிக்ஸ் ஃபார் பிகின்னர்ஸ்  - ஆன்டி பிரென்டிஸ் , லாரா பிரையன்




 



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்