நாட்டை சமூக நீதி பாதைக்கு கொண்டு வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

 

 

 

உற்பத்தியைப் பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் எனில் பகுதியாக குறையும். பிறகு, முற்றாக நின்றுவிடும். இப்படியான விளைவை தொழிலாளர்கள் முன்னமே அடையாளம் கொண்டு செயல்பட வேண்டும். புரட்சி என்பது முக்கியம். அதேசமயம், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு தெருக்களில் குழுமுவது தற்காலிகமாகத்தான். அது நிரந்தரமல்ல. புரட்சி என்பது பொது சொத்துக்களை அழிப்பதல்ல. அது மக்களுக்கு உதவும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் கொண்டுள்ளது. கடின உழைப்பும், சுய ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் புரட்சியின் பாதையில் பயணிக்க முடியும்.

முதலாளித்துவவாதிகள், துறையை போட்டியிடும் வகையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதிகளவு முதலீடு, அதற்கு கட்டாயமாக கிடைத்தே ஆக வேண்டிய லாபம், இரக்கமில்லாத விலை, விலை வேறுபாடுகள், வாங்கும் கடன்களுக்கு அதிகரிக்கும் வட்டி என முதலாளித்துவ வணிகம் பல்வேறு நெருக்கடிகளை தனக்குள்ளேயே கொண்டது. முதலாளித்து நிறுவனங்கள் ஏற்படுத்தும் போட்டி உள்நாடு, வெளிநாடு என இரண்டு பிரிவுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தொழில்துறையை சோசலிசமாக்குவது, அதில் உள்ள அதீத போட்டியை முழுக்க அழிக்கிறது. பொருளின் உற்பத்தியில் உள்ள பிரச்னைகளும் மெல்ல குறைந்துவிடுகிறது. தொழில்துறையை காலத்திற்கேற்ப நவீனமாக மாற்றாதபோது என்ன கருத்தியலைக் கைக்கொண்டாலும் தோல்விதான் ஏற்படும்.

முதலாளித்துவ உற்பத்தி என்பது லாபத்தை அடிப்படையாக கொண்டது. இன்று உழைப்பு என்பது உற்பத்தியை விட அதிகமாக விற்பனைக்கே செலவாகிறது. சமூக புரட்சி என்பது மக்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்து அதை தீர்ப்பதை அடிப்படையாக கொண்டது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றுவது முக்கியம். அதாவது, உணவு, உடை, இருப்பிடம். இதை நாட்டிலுள்ள தொழிலாளர் சங்கம், அரசு அமைப்புகளே செய்ய முடியும். இவற்றை முழுமையாக செய்தால்தான் புரட்சியில் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து செல்லமுடியும்.

அரசு, புரட்சிக்கு முன்பாக நிலங்களை எந்திரங்களை ஏகபோகமாக தனியார் நிறுவனங்களுக்கு அளித்திருந்தால் கூட அதை சமூகத்திற்கு பயன்படும் வகையில் திரும்ப எடுத்துக்கொள்ளவேண்டும். அந்தவகையில் சமூக புரட்சி முக்கியத்துவம் வகிக்கிறது. வேளாண்மையில் நவீன அறிவியல் பெரும் பாய்ச்சலை நடத்தியுள்ளது, எனவே, நாம் யோசித்து பயிர்களை விளைவித்தால் ஏராளமான பயன்களை அடையலாம்.  உணவு, வசதிகள், சொகுசு என்றுதான் தேவைகளை அமைத்துக்கொள்ளவேண்டும். சொகுசு தேவையா என்றால் குறிப்பிட்ட வயதில் அவையும் தவிர்க்க முடியாமல் தேவைபடக்கூடும்.

ஒரு நாடு, தனது இயற்கை வளங்களை வைத்து தானே தொழிற்சாலைகளை அமைத்துக்கொண்டு பொருட்களை தயாரிக்க முயன்றால் தற்சார்பாக சுயமாக முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்க முடியும். இல்லையென்றால் எதிர்ப்படும் அனைவரின் கைகளையும் முத்தமிட்டு தலையைக் குனிந்துகொண்டேதான் இருக்கவேண்டும். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், செக்கோஸ்லோவியா, ஹங்கேரி ஆகிய நாடுகள், தங்களுடைய தேவையை தாங்களே தீர்த்துக்கொள்ளும் வழிவகையைத் தேடிக்கொண்டுவிட்டன. ஆனால், சீனா, இந்தியா, மெக்சிகோ, எகிப்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் பிற நாடுகளின் உதவியைப் பெற்றுத்தான் தங்களை வளர்த்துக்கொள்ளும் நிலையில் உள்ளன. இதனால் மோர்கன், ராக்ஃபெல்லர் ஆகிய நிறுவனங்கள் அந்த ஏழை நாடுகளின் வளங்களை எளிதாக சுரண்டி கொழிக்கின்றன.

முதலாளித்துவம் என்பது மையப்படுத்தியதாக இருக்கும். ஒரு நாடு மையப்படுத்தாததாக, சுதந்திரம் கொண்டதாக இருக்கும். தொழில்துறையும், பொருளாதாரமும் சுதந்திரமாக இருக்கும். சோவியத் யூனியனும் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, முழுக்க தனது செயல்பாட்டை ஆய்வு செய்து தற்சார்பு கொண்டதாக மாற்றிக்கொண்டது. உண்மையில், சர்வாதிகார ஆட்சி நிலவிய அந்நாட்டு சூழலில் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை.

ஸ்விட்சர்லாந்து கள்ளப்பணத்தை ஒளித்து வைக்கும் வங்கிக்கு மட்டும் பிரபலம் அல்ல. வாட்சுகளின் தயாரிப்பிலும் பெரும் புகழ்பெற்றவர்கள். இத்தாலி கப்பல்களை கட்டுமானம் செய்வதில் சாதனை செய்தவர்கள், பிரான்சில் பட்டு உற்பத்தி அதிகம். ஆனால் இன்று பல்வேறு நாடுகளிலும் மேற்சொன்ன பொருட்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வணிகச்சூழல் மாறிவிட்டது.

மையப்படுத்தாத சூழலை மட்டுமே சமூகத்தில் சுதந்திரத்தை, பாதுகாப்பை, தனித்துவத்தை, மனிதநேயத்தை உருவாக்க முடியும். தற்சார்பாக இல்லாத நாட்டை வெளிநாடுகள் எளிதாக தாக்கி வீழ்த்தமுடியும். இந்தவகையில் ஒரு நாடு தனது தொழிற்சாலைகளுக்கு அதிகளவு இறக்குமதியை நம்பியிருந்தால் அதுவே சமூக புரட்சியில் மிகப்பெரும் பலவீனமாக மாறிவிடும்.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்