மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!

 

 

 

தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும்.

அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்களில் இதுவும் ஒன்று. அந்த காலகட்டத்தில் பல்வேறு புரட்சிகர அமைப்புகள், இயக்கங்கள் உருவாகி செயல்படத் தொடங்கின. மக்கள் அதிகாரத்தில் பல்வேறு வகைகள் உண்டு. இதில் தனிநபர் மக்கள் அதிகாரம், சுதந்திர வணிகத்தை ஆதரிக்கும் முதலாளித்துவ மக்கள் அதிகாரம் கூட உண்டு.

மக்கள் அதிகாரத்தில் தனிநபர் சுதந்திரம் என்பது இன்றியமையாத ஒன்று. ஒட்டுமொத்த சமூகமே அடிமைப்பட்டு கிடக்கும்போது ஒருவர் சுதந்திரம் அடையமுடியாது என்பது மைக்கேல் பாகுனின் கருத்து. அதாவது, அடிமைத்தனம் ஒருவரது சுதந்திரத்தை முழுமையாக உணரவிடாமல் தடுக்கும் என்பதே முக்கியமான கருத்து.

அனார்ச்சி என்ற ஆங்கிலச்சொல்லுக்கு கிரேக்க மொழியே மூலம். இதன் பொருள், தலைவர் இன்மை. அதாவது, தலைவர் அல்லது அரசு இன்மை. எழுத்தாளர் உரி கார்டன், மக்கள் அதிகார தத்துவவாதிகள் பல்வேறு அரசியல் அமைப்புகள் உருவாகி இயங்க மையக் கருப்பொருளாக இருந்தனர். இவர்கள் பல்வேறு வித சக்திகளின் மேலாதிக்கத்தை எதிர்த்தனர் என்று குறிப்பிடுகிறார்.

மக்கள் அதிகார தத்துவவாதிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கும், தொழிலாளர் அமைப்புகளுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஊட்டியவர்கள். ஸ்பானிய உள்நாட்டுப் போர் நடந்த 1936-38 காலகட்டத்தில் கூட இதை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டமுடியும். மக்கள் அதிகாரம் என்பது, வெறுமனே அரசு இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. மேலாதிக்கம் செலுத்தும் மையப்படுத்திய மத்திய அரசை இங்கு குறிக்கிறது. மக்கள் அதிகாரத்தை, தனிநபர் சார்ந்ததாக மாற்றியமைத்து வலியுறுத்தியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி மேக்ஸ் ஸ்டிர்னர்.

இதில் மாறுபட்டவர்களாக ரஷ்யாவைச் சேர்ந்த தத்துவவாதி பீட்டர் கிரோபோட்கின், மைக்கேல் பாகுனின் ஆகியோர் கம்யூனிசத்தின் உற்பத்தியை ஆதரித்து வந்தனர். இவர்கள், இதை தொழிலாளர்களின் வெற்றியாக, அதற்கு கிடைத்த பரிசு போல கருதினர். புரட்சியைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்களை படுகொலை செய்வது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இதை மக்கள் அதிகாரத்தை கடைபிடிப்பவர்கள், செய்யாமல் இருக்க அவர்களுக்கு கல்வி முக்கியம் என தத்துவவாதிகள் பலரும் மாறுபட்ட கருத்துகள் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், போராட்டங்களை அகிம்சை முறையில் நடத்துவதை ஏற்கிறார். ஆதரிக்கிறார்.

தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றது. இதன் காரணமாக மார்க்சிய தத்துவம் சரிவை எதிர்கொண்டது. இந்த சூழலை மக்கள் அதிகாரத்துவர்கள், முன்னமே அடையாளம் கண்டு விமர்ச்சித்திருந்தனர். சிறுபான்மை அதிகாரிகள், பெரும்பான்மை மக்களை நிர்வாகம் செய்வது பொருந்தாத ஒன்று என்று கூறினர். காலப்போக்கில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்ததும் மக்கள் அதிகார  தத்துவம் வெகுசன மக்களிடையே பரவலாகுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஒழுங்குபடுத்துபவர் இன்றியே ஒழுங்கை உருவாக்கமுடியும் என்ற கருத்து உருவாகத் தொடங்கியது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்