கார்பன் வரியின் நோக்கம்!

 

 

 

கார்பன் வரியின் நோக்கம்
வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா?

அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்றி பார்ப்போம்.

அமெரிக்கா, இரண்டாம் உலகப்போரின்போது, பெட்ரோல் டீசல் உற்பத்தியை முழுக்க ராணுவத்திற்கு வழங்கியது. விளைவாக, மக்கள் கரிம எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்தும்படி அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது. உண்மையில் ஒரு நாடு கரிம எரிபொருட்களை நம்பவில்லை. நிறுத்தவேண்டுமெனில் உடனே அத்தொழில்துறையை மூடிவிட முடியும். உலகில் எந்தவொரு முதலாளித்துவ நாடும் கரிம எரிபொருட்களை அகழ்ந்தெடுப்பதை இதுவரை நிறுத்தியதில்லை. நிறுத்தப்போவதும் இல்லை. ஏனெனில், அப்படியான அரசுகளை காப்பாற்றுவதே கரிம எரிபொருள் நிறுவனங்கள்தான். அவை கீழே வீழ்ந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சியடையும். பொருளாதார நெருக்கடி பல நாடுகளை பாதிக்கும்.

கார்பன் வரி விதிப்பு, அதுபோல உற்பத்தி நடவடிக்கையை முற்றாக தடுப்பதை தள்ளிப்போட உதவுகிறது. சீனாவின் கார்பன் வரி வணிகத் திட்டம் இந்தவகையில் இயங்குகிறது. சுரங்கம், சிமெண்ட் ஆலைகள், அலுமினிய ஸ்டீல் ஆலைகள், ரயில்கள், வாகன உற்பத்தி ஆலைகள், விமானசேவை, கடல் போக்குவரத்து, தகவல் சேமிப்பு நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களை சீன அரசு சொந்தமாக கொண்டிருக்கிறது. இவற்றுக்கும் கார்பன் வரி விதிக்கப்படுகிறது. மேக் இன் சீனா 2025 திட்டப்படி, கார்பன் வரி கட்டினாலும் கூட அரசு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்தால் உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்.

உலகிலேயே அதிகளவு கரிம எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நாடு சீனா. ஆப்பிரிக்காவில் எண்ணெய் வயல் உருவாக்குவது, மத்திய ஆசியாவில் இருந்து எரிவாயு பெறுவது, சைபீரியாவில் எல்என்ஜி முனையம் அமைப்பது, தென் சீனக்கடலில் எண்ணெய் எடுப்பது, பல்வேறு நாடுகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது என சீனா, தனது மாசுபடுத்தும் செயல்பாடுகளை எந்த தடையுமின்றி தொடர்கிறது. சீனா, தன்னுடைய பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பிற்கு, எதை முன்னர் ஒழிக்கவேண்டுமென்று கூறியதோ அதையே நம்பியுள்ளது.



மூலம்
சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் - ரிச்சர்ட் ஸ்மித்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்