திருமணமாகாத இளம் பெண்களின் ரத்தத்தைக் குடித்து இதயத்தைத் தின்னும் கொடூர பிசாசு!

 

 


 

வா அருகில் வா
கோட்டயம் புஷ்பநாத்
திகில் நாவல்

கோட்டயம் புஷ்பநாத் எழுதும் நாவலில் என்னென்ன எதிர்பார்ப்போம். இயக்குநர் சுந்தர்சி போல கிளுகிளுப்பாக திகில் கதைகளை எழுதுவார். இதிலும் பெண்களின் பெண்களின் நைட் கவுன் பட்டன்கள் தெறிக்கின்றன. அதைவிட முக்கியம், நாயகி லூசி இறுதியாக கர்த்தரை சரணடைந்து தனது பாவத்தை ஏற்று மடைமாறுகிறாள். அதனால் அவள் உயிர் பிழைக்கிறாள்.

ஜானி, லூஸி இருவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்து மணம் செய்கிறார்கள். முதலிரவிலேயே மணமகன் லூசியை தொடாமல் மதுபானத்தை தொட்டு ரசித்துக் குடிக்கிறான். சிகரெட் புகைக்கிறான். இதிலேயே அவனுக்கு உடலுறவில் பெரிய ஈடுபாடு இல்லையோ என்று தோன்றுகிறது. அங்கு வந்து பரிசில், ஒரு கடிதம் இருக்கிறது. அதில் அவர்கள் தேனிலவை தனது பங்களாவில் கொண்டாடலாம் என பெர்னார்ட் என்பவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் யாரென்று கூட விசாரிக்காமல் இருவரும் தேனிலவுக்கு அந்த மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் திகில் அனுபவங்கள்தான் கதையின் முக்கியப் பகுதி.
லூசிக்கு அந்த பங்களா, அதன் வினோதமான இயல்பு எல்லாமே பயம் தருகிறது. ஆனால் கணவன் மதுபானம் கொடுத்து மயங்கிக் கிடக்க அவளது கன்னி கழியச்செய்பவன், அந்த பங்களாவின் உரிமையாளன் என அவள் தெரிந்துகொள்கிறார்கள். அவளுக்கு உறவு திருப்திதான் என்றாலும் கூட பெர்னார்ட் இறந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிறது என்பது பீதியை ஏற்படுத்துகிறது. மெல்ல அவள் பெர்னார்டை தெரிந்துகொள்ளும்போது ஜானியை அவன் கொன்று வீசியிருக்கிறான். அவனது உடலை ஓநாய்கள் தூக்கிச் செல்கின்றன. இப்போது பெர்னார்ட், லூசியை உயிரோடு விட்டுவிடுவதாகவும், தன்னை அவள் தனது வீடுள்ள பகுதிக்கு கூட்டிச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறான்.

பெர்னார்ட் ஒரு பிசாசு. அவர் தனது உடலை பாதுகாக்க, சக்தி உள்ளவனாக இருக்க மனித ரத்தம் தேவை. அதை குடித்து, மனித இதயத்தை எடுத்து தின்ன வேண்டும். அப்போதுதான் அவருக்கு பிசாசு சக்தி நீடிக்கும். திருமணமாகாத இளம்பெண்களை உறவுகொண்டு ரத்தம் குடித்து இதயத்தை தின்பதே அவன் லட்சியம். இதற்காக லூசியை கொல்லாமல் விடுகிறான். அதுவும் அவளை பலமுறை வல்லுறவு செய்து ரத்தம் உறிஞ்சிக் குடித்துவிட சலித்துப்போகிறான். புதிய மணமாகாத இளம் பெண்களை தேடுகிறான். அதற்காக லூசியின் தந்தை வீட்டுக்கு அருகில் உள்ள ஆங்கிலேயரின் வீட்டை விலைக்கு வாங்குகிறான். அங்கு சென்று தங்கினால், லூசியுடன் உதவியுடன் நிறைய பெண்களை அடைய முடியும் என நம்புகிறான்.

ஆனால் கதையில் லாஜிக் இல்லாமல் போகிறது. கணவன் இறந்துபோன கதையை சொல்வது பொருத்தமில்லாததாக யாருக்குமே தோன்றுவதில்லை. எப்படி லூசி சொல்வதை உடனே நம்புகிறார்கள். அதுவும் இல்லாமல், பெர்னார்டின் எஸ்டேட் பற்றி காவல்துறையினர் கூட விசாரிக்காமல் இருப்பது எப்படி? லூசி மேரி, இன்ஸ்பெக்டர் மாதவன், வேலைக்காரன் முகுந்தன் மூன்று பேரை கொல்லுகிறாள். இதில் மேரியைக்கொல்ல பெர்னார்டிற்கு உதவுகிறாள். அவர் மேரியை வல்லுறவு செய்து மாரை பிளந்து இதயத்தை எடுத்து தின்றுவிட்டு உடலை வீட்டின் நிலவறையில் புதைத்துவிடுகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேரி குருவிளை எனும் லூசியின் த்ந்தை வீட்டில் வேலை செய்யும் பெண். ஆனால் அவள் காணாமல் போனது பற்றி யாருமே பேசுவதில்லை ஏன்?

பிசாசை வணங்கும் மனிதரான பெர்னார்ட் இயற்கையை கட்டுப்படுத்தும் திறமை கொண்டவன். அப்படி இருப்பவனை பாதிரியார் வெறும் ஜப மாலை மூலம் மட்டுமே கொல்வதாக காட்டுவது நம்பவே முடியவில்லை. அடுத்து லூசி பிழைத்திருப்பது. அவள் இரண்டு கொலைகளை செய்திருக்கிறாள். மனம் மாறுகிறாள். ஆனால் அப்பாவியான இருவரைக் கொன்றதற்கு என்ன தண்டனை? போலீஸ்காரரான அலெக்சை மணம் செய்து வைப்பதா? அவள் இறந்துபோவதே சரியான முடிவாக இருந்திருக்கும். பெர்னார்ட், முகுந்தன், மாதவன் என மூன்று பேருடன் உடலுறவு கொண்டவள். தவறான பாதையில் ஏற்கெனவே நடந்து பாதிதூரம் சென்றவள். அப்பாவியான மேரி என்று இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட காரணமாக இருந்தவள் எப்படி இறைவனால் மன்னிக்கப்படுகிறாள். நம்பவே முடியவில்லை.

பாதிரியார் வில்லியம், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோரின் பிசாசுக்கு எதிரான போராட்டம் சிறுபிள்ளை விளையாட்டு போலவே உள்ளது. இதில் பரிதாபமான சாவு, ஆராய்ச்சியாளர் ஜார்ஜூக்குத்தான். உண்மை தெரிந்தாலும் பெர்னார்ட் பற்றி எதையும் உலகிற்கு சொல்லமுடியாமல் செத்துப்போகிறார். அதையும் கூட யாரும் சந்தேகமாக பார்க்கவில்லை. அடுத்து கிளப்பில் சந்தித்த பெண் மருத்துவர், அவரின் காதலன் மார்ட்டின் இவ்விருவருமே புகழ்பெற்ற ஹோட்டலில் கொல்லப்படுகிறார்கள். அதையும் ஹோட்டல் மறைக்கிறது. சரி. ஆனால் காவல்துறை ஏன் விசாரிக்கவில்லை.

எழுத்தாளர் புஷ்பநாத் இக்கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் விட்டிருக்கிறார். அதை படிக்கும்போது ஒருவர் உணரமுடிகிறது. பெர்னார்ட் இறப்பது ஒன்றும் பெரிய விடுதலையாக தோன்றவில்லை. அவரை விட மோசமான பிசாசுகள் சமூகத்தில் உள்ளனர். அவர்கள்தான் மேரியை முகுந்தனை இறந்துபோக விட்டவர்கள்.
கோமாளிமேடை குழு

 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்