இடுகைகள்

சிஏஏ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்பிஆர், என்ஆர்சியில் ரகசியம் ஏதுமில்லை!

படம்
மக்கள்தொகை, குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்புகளுக்கும் அளிக்கப்படாது! சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை என்பதே இல்லை. மேலும் இதில் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை என்பதும் விடுபட்டுள்ளதே? குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்புப் படி சரியானதே. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளும்ன்றத்திற்கு உரிமை உண்டு. இதுபற்றி அரசமைப்புச் சட்டத்தில் 246 இதற்கான வழிகாட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன.  நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அங்கு இயற்றப்படும் சட்டம், அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கலாமா? நாங்கள் சட்டப்பிரிவு 14 படி, குடியுரிமைச்   சட்டத்தை உருவாகியுள்ளோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறியுள்ளோம். இந்திராகாந்தி, உகாண்டாவில் இடி அமீன் ஆட்சியின்போது அங்கிருந்தவர்களை இந்துக்களாக கருதி குடியுரிமையை அளித்தார்.மேலும் இந்

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு

குடியுரிமை சட்டத்தை விரிவு செய்யும் முதல் மாநிலம் நாங்கள்தான்!

படம்
நேர்காணல் உத்தரப்பிரதேச சிறுகுறுதொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசின் சிஏஏ சட்ட திருத்தத்தை அமல் செய்யவுள்ளது. சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?  இச்சட்டம் இங்கு அடிப்படை அளவில் அமலாக உள்ளது. பின்னர் முழுமையாக பின்பற்றப்படும். மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் தேவை. நாம் காற்றில் சட்டத்ததை அமல் செய்ய முடியாது. மாவட்ட நீதிபதிகள், மாவட்டங்களிலுள்ள சட்டப்பூர்வமற்ற முறையில் தங்கியுள்ள அகதிகளை அடையாளம்  காணச்சொல்லி இருக்கிறார்களே? அப்படி எந்த அரசு ஆணையும் எங்களுக்கு வரவில்லையே. இதுபோன்ற ஏராளமான பொய் தகவல்களை மக்களுக்கு சிலர் அனுப்புகிறார்கள். இதனை தீர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. குடியுரிமை திட்ட சட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளீர்களா? அதனை மத்திய அரசுதான் எங்களுக்கு கூற வேண்டும். நாட்டிலேயே  பெரிய மாநிலமாக எங்கள் மாநிலம் இச்சட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது. உங்கள் மாநில மக்களுக்கு இச்சட்டம் பற்றி சரியானபடி விளக்கிவிட்டீர்களா? நாம் மக்களிடம் ஒவ்வொரு முறையும் ஆதரவு மனநிலையை எதிர்பார்க

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி