மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்
dh |
நேர்காணல்
ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர்
நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே?
மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.
இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா?
அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது.
உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன?
மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள்.
தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து?
மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். சட்டத்தின் பெயரால் கொலைகளை செய்கிறவர்களை என்ன சொல்வது? விளிம்புநிலையில் உள்ள மக்களின் பக்கமே நான் நிற்பேன்.
நன்றி - இந்தியா டுடே