நம் காதுகளை மட்டும் தூங்கும்போது கூட மூடமுடிவதில்லை ஏன்?






Can You Hear Me Now Hello GIF by P.O.S.
giphy



மிஸ்டர் ரோனி

கண்களை மூடுவது போல காதுகளை நாம் ஏன் மூடிவிட முடிவதில்லை?

கண்களை மூடினால் காது விழித்திருக்கும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படி அறிந்துகொள்வது? கண்களை மூடிக்கொண்டு தூங்கினாலும், வீட்டுக்குள் யாரே உள்ளே வருவதை எப்படி அறிகிறோம்- காதுகள் திறந்திருப்பதால்தான். இது ஆதிகாலத்திலிருந்து நமக்கு இயற்கை கொடுத்துள்ள ஃபயர்வால் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வருத்தமும் இருக்காது.

அனைத்து விலங்குகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும். ஆனால் சீல் போன்றவை நீந்தும்போது மட்டும் அதன் காதுகளை மூடிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

நன்றி - பிபிசி