நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?
pixabay |
மிஸ்டர் ரோனி
நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்?
பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள்.
18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
நன்றி - பிபிசி