அதிகளவு தண்ணீர் குடித்தால் என்னாகும்?
giphy |
மிஸ்டர் ரோனி
நாம் தினசரி அவசியம் குடிக்கவேண்டிய நீரின் அளவு என்று ஏதாவது உண்டா?
உங்களுக்கு தாகம் ஏற்பட்டால் கோலா, ப்ரூட்டி குடிக்காமல் தண்ணீர் குடித்தாலே போதும். இவ்வளவு நீர் என்று எந்த அளவும் நீர் குடிப்பதில் கிடையாது. ஏசியில் உட்கார்ந்து இருப்பவருக்கும், பைக்கில் வெளியே அலைபவருக்கும் உணவு, நீர் தேவை மாறுபடும். நீங்கள் பிஸ்லெரி நீரை பாட்டில் பாட்டிலாக கேன் கேனாக குடித்தாலும் உடலைப் பொறுத்தவரை ஒருமணி நேரத்திற்கு 800 மி.லி அல்லது ஒரு லிட்டர் நீரை வெளியேற்றும்.
மூன்று மணிநேரத்தில் ஏழு லிட்டர் நீரைக் குடித்தாலே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். உடலிலுள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமான நீரை குடிப்பது வெளியேற்றி விடும். இது உடலை கடுமையான சோர்வில் தள்ளும். இந்தவகையில் மூளை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
நன்றி - பிபிசி