கல்வி உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் - பூமி பட்னேகர்
நேர்காணல்
பூமி பட்னேகர், சினிமா நடிகை
வணிகம்சார்ந்த படங்களிலும் கலை சார்ந்த படங்களிலும் சிறப்பாக நடித்துவருபவர் இவர். படத்தின் உண்மைத் தன்மைக்கு சிறப்பாக மெனக்கெடும் அரிய நடிகை.
நடிகையாகவேண்டும் என்று தோன்றியது எப்போது?
நடிப்பதிலும், அழகான ஆடைகளை அணிவதிலும் சிறிய வயதிலிருந்து எனக்கு ஆர்வம் இருந்தது. என் அம்மா இதற்காகவே என்னை வைத்து நிறைய புகைப்படங்களை எடுக்கச் செய்தார். என் தந்தைக்கு நான் வெளியுறவுத்துறை சார்ந்த பதவியில் இருக்கவேண்டும் என்று ஆசை.
உங்களுக்கு ஆண் நடிகர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் 5 சதவீதம்தான் தரப்படுவதாக கூறினீர்கள்?
ஆம் அது உண்மைதான். அப்படித்தான் நான் படங்களில் நடித்து வருகிறேன்.
நீங்கள் தற்போது நடித்த கார்த்திக் ஆர்யன் கூட உங்களின் அளவே திரையுலக அனுபவம் கொண்டவர். நீங்கள் அவரைவிட குறைவாக சம்பளம் பெறுவது உங்களுக்கு கோபம் தரவில்லையா?
கார்த்திக் ஆர்யன், ஏழு ஆண்டுகளாக இங்கு உழைத்து இந்த இடத்தை அடைந்துள்ளார். ரசிகர்களை சம்பாதித்துள்ளார். அவருக்கான ஊதியத்தை அவர் கேட்டு பெறுகிறார். இதில் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.? மேலும் இது பணம் போட்டு பணம் எடுக்கும் தொழில். இங்கு திறமை இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் பொதுவாக அரசியல் பற்றிப் பேசுவதில்லை. ஆனால் ஆசீபா வல்லுறவு வழக்கில் குரல் கொடுத்தீர்கள். குற்றவாளிகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களாக வேறு இருந்தார்கள்.....
நான் என்னைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறேன். அது புத்திசாலித்தனம் அல்ல என்று உணர்ந்தாலும் நான் அப்படித்தான் இருக்கிறேன். நிர்பயா விவகாரத்திலும் நான் என் கருத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.
சாந்த் கீ ஆன்க், பாலா இரண்டு படங்களிலும் உங்கள் மேக்கப்பை பார்க்க சகிக்கவில்லை.
இதில் சாந்த் கீ ஆன்க் சிறிய பட்ஜெட் படம். பாலாவில் எனக்கு போடப்பட்ட மேக்கப் பற்றி நான் தனியாக சொல்ல ஏதுமில்லை. இயக்குநர் என் நிறம் அப்படியிருக்க விரும்பினார். அவ்வளவுதான். இந்த அம்சங்கள் விமர்சிக்கப்பட்டாலும் பாலா படம் திருப்திகரமாக ஓடியது மகிழ்ச்சிதான்.
நீங்கள் பிறந்து வளர்ந்த இடம், தகுதி, ஊர் காரணமாக உங்களுக்கு ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதா?
எனக்கு தும் லகா ஹை கைசா பட வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான். பட இயக்குநர் சரத் என்னை ஆடிஷனில் தேர்ந்தெடுத்தார். ஆனால் அப்போது நான் யஷ்ராஜில் ஆடிஷன் நிர்வாகியாக பணியாற்றி வந்தேன். இதனால் அவர் என்னை நடிக்க வைக்கத் தயங்கினார். ஆனால் இன்று வாய்ப்புகளை பெற்று என்னால் முன்னேறி வர முடிந்தது. பல்வேறு வாய்ப்புகளை கல்வி உங்களுக்கு உருவாக்கித் தரமுடியும் என்பதே இதில் என் கருத்து
நன்றி - மின்ட், ஓம்கார் கண்டேகர்.