பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?
giphy |
மிஸ்டர் ரோனி
பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா?
இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது.
அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி - பிபிசி