மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?
மிஸ்டர் ரோனி
பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக இருக்கிறது. என்ன காரணம்?
பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம் போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும்.
பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன.
நன்றி - பிபிசி