கர்ப்பிணியை தாக்கி குழந்தையை வெளியே எடுத்த ஜப்பான் சைக்கோ!





Image result for yoshio kodaira



அசுரகுலம் - இன்டர்நேஷனல்

யோஷிரா கொடைரோ

சுருக்கம்

ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீரர். சீனா - ஜப்பான் போர் நடைபெற்றபோது அதில் பங்கேற்று பல்வேறு கொடூர கொலைகளைச் செய்தார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொன்றார். 1928ஆம் ஆண்டு சீனாவின் ஜினன் எனுமிடத்தை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. இப்போரில் பல்வேறு கொலைகள், வல்லுறவுகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற கொடுமைகளை உலகிற்கு சொன்ன வீர ர்களில் யோஷிராவும் ஒருவர்.

மே, 1945 முதல் ஆகஸ்ட் 1946 வரையில் பத்து பெண்களை கொடூரமாக கொன்றார். இறந்த பெண்ணுடன் பாலுறவு வைக்கு முயன்றபோது காவல்துறையில் பிடிபட்டார். 1946ஆம் ஆண்டில் ஆக. 20 அன்று கைதானவர், அடுத்த ஆண்டு ஜூனில் தன் கொலைகளை ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும்போதும் பெரிதாக யோஷிரோ கவலைப்படவில்லை. அமைதியாக சிகரெட் ஒன்றைப் பிடித்துவிட்டு இறந்தார்.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து டோக்கியோ இயர் ஜீரோ என்ற படம் 2007ஆம் ஆண்டு தயாரானது.

1905இல் ஜப்பானில் பிறந்த யோஷிரோ, பள்ளியில் சாகச வீரன். தினசரி வகுப்பில் கிடைக்கும் சோனிப்பயல்களை அடித்து வெளுப்பது பிடித்த பணி. இவரைப் பார்த்தாலே ஆசிரியர்களே மிரண்டனர். முழுவேலையாக விளையாட்டு, அடிதடி என திரிந்ததால் 23 பேர் உள்ள பள்ளியில் 21ஆவது ரேங்க் எடுத்தார். பதினெட்டு வயதில் இளம்பெண் ஒருவரை வாந்தி எடுக்க வைத்து தந்தையானார். பின்னர், தனது குணத்திற்கேற்ப ராணுவத்தில் சேர்ந்தார்.

சீனாவின் மீது நடைபெற்ற போரில் பெண்களின் மீது கடுமையான வன்மத் தாக்குதலை நடத்தினார். கேட்பாரற்ற பெண்களை அடித்து விபச்சாரத்தையும் சில இடங்களில் செய்து வந்தார். கர்ப்பிணி ஒருவரின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து எறிந்து கொன்றோம் என்றார். இதுபோல நிறைய சம்பவங்களை காவல்துறையில் பரவசமாக பகிர்ந்துகொண்டார்.

இவரின் குணம் தெரியாமல் தேவாலய பாதிரியார் தன் மகளை மணம் செய்துகொடுத்தார். இதில் யோஷிரோவின் தந்தைக்கு சம்மதமில்லை. சில மாதங்களிலே பெண்ணை கடுமையாக தாக்கினார். ஏன் என்று கேட்ட பெண்ணின் தந்தையை இரும்புக் கம்பியில் அடித்துக் கொன்றார். பிற உறவினர்களுக்கும் படுகாயம் அடையும் அளவு அடித்துவிட்டார். அதோடு அந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டது.

ஜப்பானில் அப்போது போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அதனால் யோஷிரோவின் விஷயங்களை யாரும் உடனே கண்டுகொள்ளவில்லை. ஜாலியாக அனைத்து இடங்களுக்கும் சென்று, இளம்பெண்களை நோட்டமிடுவார். எனி ஹெல்ப் ஷாலினி போல பெண்கள் மாட்டினால் கையில் உள்ள காசை வைத்து உணவு வாங்கிக் கொடுத்து நெருக்கமாவார். போலிப்பெயரை தனது பெயராக சொல்லுவார். அதை நம்பும் பெண்களை வல்லுறவு செய்து கொல்லுவார்.பின் ஏதாவது பொதுஇடங்களில் நிர்வாணமாக எறிந்துவிடுவார்.

நன்றி - மர்டர்பீடியா