இடுகைகள்

கற்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தங்க கண்களைக் கொண்டு காணாமல் போன தாத்தாவின் வரலாற்றைத் தேடும் பேரன் - கோல்டன் ஐஸ் - சீன டிவி தொடர்

படம்
  கோல்டன் ஐஸ் சீன டிவி தொடர் புனைவு, வரலாறு ராக்குட்டன் விக்கி 56 எபிசோடுகள் பெய்ஜிங் நகரில் உள்ள தொன்மை பொருட்கள் அடகுக் கடையில் ஜூவாங் ருய் வேலை செய்து வருகிறான்.  பெற்றோர்கள் இல்லை. சைக்கிளில் செல்வது, சமூக வலைத்தளத்தில் நண்பர்களுடன் சென்ற பார்ட்டிகளை பதிவிடுவது என அவனது வாழ்க்கையே அவ்வளவுதான். ஒருநாள் அவனது நண்பன் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீட்டுக்குப் போகாமல்  அடகுக்கடைக்கு ஏதோ பொருளை எடுப்பதற்காக வருகிறான். அந்த நேரத்தில் அவசரமாக வந்ததாலும் மது போதையிலும் கதை மூடாமல் உள்ளே வந்துவிடுகிறான். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளே புகுகிறது. அவர்கள் அங்கு ஒரு தொன்மையான பொருளை திருட வந்திருக்கிறார்கள். ஆனால் ஹூவாய் ருய் செய்த முட்டாள்தனமான காரியத்தால் பல்வேறு பொருட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு நொறுங்குகின்றன. அதில் தொன்மைப் பொருளின் சிறுபகுதி அவனின் கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு, காவல்துறை அந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரிக்கும் பெண் அதிகாரி ஃபெய்பெய் ஹூவாங் ருய்தான் திருட்டு கும்பலுக்கு உதவி செய்தானோ என்ற ரீதியில் விசாரிக்கிறார். இந்த

எது கனிமம்?

படம்
  தெரியுமா ?  எது கனிமம்? நிலக்கரி, எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றையும் கூட கனிமம் என பொதுவாக கூறலாம். இவை தேசத்தின் முக்கியமான இயற்கை வளங்களாகும். மேற்சொன்ன பொருட்களை துல்லியமாக அடையாளப்படுத்த ஹைட்ரோகார்பன் எனலாம். திரவங்கள் மற்றும் வாயுக்களை கறாரான விதிகளின்படி பார்த்தால் கனிமம் இல்லை என்று கூறிவிடலாம். வைரம், மரகதம் ஆகியவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன. இயற்கையாக உருவாகவில்லை என்பதால் இவற்றை கனிமம் என்று கூறமுடியாது. உணவில் உள்ள கனிமங்கள் என்று கூறப்படுபயான இரும்பு, கால்சிய்ம, ஜிங்க் ஆகியவற்றையும் துல்லியமாக கனிமம் என்ற வகையில் வரையறுக்க முடியாது.  ஒரே வேதிப்பொருட்களைக் கொண்ட உலோகங்கள்  தங்கம், செம்பு.  உலோகமல்லாத சல்பர், கார்பன் ஆகியவற்றை இயற்கையான கூறுகள் (Native elements) எனலாம்.   உலோகம் அல்லது பகுதியளவு உலோகம் சல்பருடன் இணைந்தால், அதனை சல்பைடு எனலாம். எ.டு. சால்கோசைட் (Chalcocite) இதிலுள்ள உலோகம், செம்பு.  நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வேதிப்பொருட்கள் உலோகத்தோடு இணைந்தால் அதனை ஹைட்ராக்சைடு எனலாம். எ.டு. ப்ரூசைட் (Brucite), இதிலுள்ள உலோகம், மாங்கனீசு.  ஹாலோஜன் பொருட்களான குளோரின

பிட்ஸ் - புவியியல்

படம்
  பிட்ஸ்  அமெரிக்காவில் இயங்கும் நிலையில் 18 எரிமலைகள் உள்ளன. இவை அலாஸ்கா, ஹவாய் மற்றும் மேற்கு கடற்புர பகுதிகளில் அமைந்துள்ளன.  மாணிக்கம், நீல மாணிக்கம் ஆகிய இரண்டுமே ஒரே கனிமத்தால் உருவானவை. இதன் பெயர் கொருண்டம் (corundum). வைரத்தை விட அரிதானவை மாணிக்கம், நீலமாணிக்கம், மரகம் ஆகிய கற்கள்.  வைரங்கள் அனைத்துமே ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை அல்ல. இவை மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, பழுப்பு, கருநீலம், சாம்பல், கருப்பு என பல்வேறு நிறங்களில் உள்ளன. இப்படி பல்வேறு நிறங்களில் வைரம் இருப்பதை ஃபேன்சிஸ் (fancies) என்று அழைக்கின்றனர். அமெரிக்காவின் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அலாஸ்கா கண்டறியப்பட்டுள்ளது.   தகவல் https://www.geologyin.com/2016/03/18-geological-facts-that-might-surprise.html

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில