இடுகைகள்

வேதாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வனக்காவல் படையில் நடைபெறும் துரோகம் - வேதாளர் துப்பறிகிறார்!

படம்
வஞ்சகர் பிடியில் வனக்காவல் படை கதை – மைக்கேல் டெரிஸ் ஓவியம் ஜார்ஜ் ஒலேசென் தமிழில்: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் முகமூடி வீரர் அல்லது வேதாளர் வனக்காவல் படையை அமைத்து அதன் மூலம் எப்படி சலீம் பே என்ற சட்டவிரோத பயங்கரவாதியை பிடித்தார் என்பதுதான் கதை. தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்துள்ளது. வனக்காவலர் படை எப்படி அமைக்கப்பட்டது என்ற வரலாற்றை சிறுவர்களுக்கு வேதாளர் விளக்குகிறார். அதன் வழியே கதை தொடங்குகிறது. ஆறாவது வேதாளர் வனக்காவலர் படையை கடற்கொள்ளையர்கள் மூலம் தொடங்குகிறார். அதாவது இவர்கள் திருந்தி வாழ்பவர்கள். இவர்களுக்கு இடையில் புகும் இரட்டை ஏஜெண்ட் ஒருவன் சலீம் பேயின் ஆள். அவன் மூலம் வனக்காவலர் படையின் நடவடிக்கைகளை சலீம் பே கண்டுபிடித்துவிடுகிறான். அந்த துரோகியை வனக்காவலர் படையில் கர்னல் செந்தாடியாரும், கமாண்டர் வேதாளரும் எப்படி பிடித்தார்கள், சலீம் பேயை எப்படி முறியடித்தார்கள் என்பதும்தான் கதை. கதையில் வேதாளருக்கு பெரியளவு சண்டைகள் கிடையாது. முழுக்க   சலீம் பேயுக்கும் அவருக்கும் நடைபெறும் மூளை யுத்தம்தான் கதை. அதனால் பெரிய எதிர்பார்ப்புகளோடு கதையைப் படிக்கத் தொடங்கினால் ஏமா

வேதாளர் அசத்தும் மர்மச்சிலை ரகசியம்!

படம்
வேதாளர் அதிரடிக்கும் மர்மச்சிலை..... இலங்கோ பழங்குடிகளிடமிருந்து தெய்வச்சிலை(இரண்டு மான்கள் ஒன்றாக இணைந்தது) லோகா என்பவரால் கடத்தப்படுகிறது. இவர் பெங்காலியா நாட்டு அதிபர் லூகாவின் சகோதரர். யார் திருடியது என்று தெரியவில்லை. பாதுகாக்கும் வீரர் மதுபோதையில் விழுந்து கிடக்கிறார். இந்த தகவல்களைக் கேட்டு வேதாளர் துப்பறிய தொடங்குகிறார். அதற்காக உதவி கோருகிறார் அதிபர் லூகா. உடனே லோகாவை ஃபாலோ செய்கிறார் வேதாளர். அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை கும், டிஷ்யூம், ஐயோ, வுட்ரா ங்கொய்யால என வில்லன் அலற அலற கதை சொல்கிறார்கள். ராணி காமிக்ஸின் வெளியீடு. குறைந்த விலையில் நிறைவான காமிக்ஸ். ஆனால் வேதாளருக்கான சண்டைக்காட்சிகள் குறைவு.  டெவில் கதை முழுக்க வந்தாலும் அதற்கும் கதையில் பங்கு கிடையாது. நன்றி: பாபு பெ.அகரம்

மரணக்குகையில் வைரக்குவளை ஆபத்து!

படம்
வேதாளர் அல்லது மாயாவி அசத்தும் மரணக்குகை ஆக்சன்களே இல்லாத வேதாளரின் கதை. ரெக்ஸ், டாம் என்ற இரு சிறுவர்களுக்கு வேதாளர் தன் குகையிலுள்ள பொருட்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார். அப்போது அங்கு, முன்னரே வந்திருந்த பேராசிரியர் வைர குவளை பற்றி தகவலை ஒருவருக்கு கூறுகிறார். எதற்கு? தன் அறிவை நிரூபிக்க. இதனைக் கேட்கும் ஒருவர், பேராசிரியர் மூலமாக அந்த வைர கோப்பையை அபகரிக்க திட்டம் போடுகிறார்.  லூசு பேராசிரியர் தன் அறிவை மற்றவர்கள் ஏற்க எதையும் செய்யத் தயாராகிறார். அப்போதுதான் எதற்கு வைரக்குவளை என்று கேட்க விற்கத்தான் என்ற திருடர் சொல்ல, அய்யய்யோ நான் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டீங்கன்னு நினைச்சேன் என எஸ்கேப் ஆக நினைக்கிறார். திருடர் கொன்றுவிடுவதாக சொல்ல, பீதியாகிறார் பேராசிரியர்.  அப்புறம் என்ன காட்டுக்கு பேராசிரியர் செல்லவும், அவரை பின்தொடர்ந்து திருடர் போகிறார். வேதாளர் இருவரையும் குமட்டில் குத்தி கொல்லாமல் , குகை முழுக்க சுற்றிக்காட்டுகிறார். ஆவ்... என கொட்டாவி விடக்கூடாது.  பின் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திருடர் வேதாளரையே மிரட்டுகிறார். வேதாளர் ஏதாவத

பலி வாங்கும் வைரம்!

படம்
வைரத்தின் நிழல் காமிக்ஸ் வேதாளர் அதகளம் செய்யும் காமிக்ஸ் கதை இது. கதை, வேதாளரின் சாகசத்திற்கு இது தீனிபோடும் கதை அல்ல. டன்கல் நட்சத்திரம் எனும் வைரம், காட்டிலுள்ள ஒருவருக்கு கிடைக்கிறது. அதனை ஒருவன் திருடி, இளவரசரிடம் விற்க முயற்சிக்கிறேன். இதனை அறிந்த வேதாளர் அத்திருடனை கும், மடார் என தாக்கி மண்டையோட்டு முத்திரையை முகவாயில் பதிக்கிறார். பின் அந்த வைரம் அக்ஸல் எனும் மருத்துவமனைக்கு செல்கிறது. அங்கு பணியாற்றிய மருத்துவருக்கு இளவரசர் கைமாறாக கொடுக்கிறார். பின்னே நோய்வாய்ப்பட்ட இளவரசரைக் காப்பாற்றினால் சும்மாவா? அங்குதான் சிக்கல். ஏனெனில் வைரத்தின் மதிப்பு பத்து லட்சத்திற்கும் மேல். அதனை விற்றால்தானே காசுகிடைக்கும். அதை விற்க போகும்போது டாக்டரின் மகனை கொள்ளை கும்பல் போட்டுத்தள்ளி  சாரி காயப்படுத்திவிடுகிறது.  வைரத்தை மீட்க வேதாளர் நகருக்கு செல்கிறார். காய்கறிக்கடையில் சண்டைதான் க்ளைமேக்ஸ். அப்புறம் என்ன? மூன்று திருடர்களை வேதாளர் குமுறுகஞ்சி காச்சுவதோடு கதை முடிவுக்கு வருகிறது. நீண்ட கதை கிடையாது. வேதாளருக்கு பெரிய ஆக்சன் காட்சிகள் இல்லை. இதுபோல நிறைய இல்லைகள் இ