இடுகைகள்

ஸ்னாக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டிலேயே வேலை செய்யும் முறை தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது! - எதை பெற்றோம்? எதை இழந்தோம்?

படம்
                வொர்க் பிரம் ஹோம் ! கொரோனா வேகமாக பரவியபோது ஐடி நிறுவனங்களோடு பிற நிறுவனங்களும் சங்கடத்தோடு வேறு வழியின்றி அறிவித்த விஷயம் வீட்டிலேயே வேலை செய்யலாம் என்பதுதான் . நிறைய நிறுவனங்கள் ஆபிசிலுள்ள கணினிகளை கூட சொந்த செலவில் பணியாளர்களின் வீடுகளுக்கு மாற்றிக்கொடுத்தன . இணைய இணைப்பிற்கும் வசதி செய்தன . சில நிறுவனங்கள் இதனை செய்யாமல் அரசு போல வேலையைக் காப்பாற்றிக்கொள்ள இதைச் செய்வது எல்லாம் உங்கள் பொறுப்பு என ஒதுங்கிக்கொண்டன . அதிக தொலைவிலிருந்து மெட்ரோ ரயில் , உள்ளூர் ரயில் பிடித்து வருபவர்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது . ஆபீசில் உட்கார்ந்து மதிய உணவிற்கு நம்ம வீடு வசந்தபவன் போகலாமா இல்லையென்றால் பாரதி மெஸ்ஸா என கூகுள் செய்தவர்களின் உற்பத்தித்திறன் கூட கூடியது உண்மை . கூகுள் மீட் , ஜூம் மீட்டிங் என கலந்துரையாடல்கள் தொடர்ந்தன . நெருங்கிய அலுவலக நண்பர்களுடன் போனில் பேசினாலும் நேரடியாக அவர்களைப் பார்த்து பேசுவது போல சூழல்கள் அமையாத்து பலருக்கும் சிக்கலாகவே இருந்தன . உங்கள் நண்பர்கள் ஆபீசில் ஜெராக்ஸ் எடுக்கும்போது , நோட்டில் கையெழுத்து போடும்போது , வாட