இடுகைகள்

ஏழு பாவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழு பாவங்களை முற்றாக ஒழிக்கும் சீரியல் கொலைகாரர்! - செவன் -1995- டேவின் ஃபின்ச்சர்

படம்
  செவன் மோர்கன் ப்ரீமன், பிராட்பிட் இயக்கம் டேவின் ஃபின்ச்சர் 1995ஆம் ஆண்டு வெளியான படம். இன்றளவிலும் அதன் உருவாக்கம், கதை, நடிப்பிற்காக பேசப்பட்டு வருகிறது. படத்தில் வரும் மையப்பொருளைப் பொறுத்தவரை அதில் நல்லது, கெட்டது என எதையும் தீர்மானிக்க முடியாது. ஜான் டோ என்ற சீரியல் கொலைகாரர் நகரில் கொலைகளை செய்துகொண்டே வருகிறார். கொலைகளை ஆராய வில்லியம் சோமர்செட், டேவிட் மில்ஸ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். அவன் கொலை செய்யும் பாணிதான் கதையில் முக்கியமானது. கிறிஸ்துவ மதத்தில் 7 பாவங்கள் என்பது முக்கியமானது. இக்கொள்கைப்படி  கொலையாகும் ஒவ்வொரு நபர்களின் அருகிலும் பாவத்தை சுவற்றில் எழுதி வைத்துவிடுகிறான் கொலைகாரன். கோட்பாடு சரி, கொலைகாரனை கொத்தாக பிடித்து கைது செய்தார்களா இல்லையா என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி.  இதில் வில்லியம் சில மாதங்களில் ஓய்வுபெற்று  வேறு ஊருக்கு செல்லவிருக்கிறார். அவருக்கு தான் வேலை செய்யும் வேலை பிடிக்கவில்லை. அடுத்தவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் மக்களை தனக்கு பிடிக்கவில்லை என்கிறார் வில்லியம். டேவிட் மில்ஸைப் பொறுத்தவரை அவர் தனது மனைவியுடன் அந்த நகருக்கு